×

ஹிட்லர், முசோலினியின் கொள்கைகளால் பா.ஜ.க. ஈர்க்கப்பட்டுள்ளது... பூபேஷ் பாகல்

 

ஹிட்லர், முசோலினியின் கொள்கைகளால் பா.ஜ.க. ஈர்க்கப்பட்டுள்ளது சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகல் குற்றம் சாட்டினார்.

சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகல் செய்தியாளர்களிடம் பேசுகையில் கூறியதாவது: பா.ஜ.க.வின் சித்தாந்தம் பொய்கள் மற்றும் புரளிகளை அடிப்படையாக கொண்டது. அவர்களின் கொள்கைகள் ஹிட்லர் மற்றும் முசோலினியால் ஈர்க்கப்பட்டவை. அவர்களின் ஆடைகள் கூட இந்தியா அல்ல. அவர்கள் பேண்ட்கள், அரை கால்சட்டை, கருப்பு தொப்பிகளை அணிவார்கள். ராகுல் காந்தியின் இந்துத்துவவாதி கருத்தால் எங்கள் மாநிலத்தில் பா.ஜ.க. மட்டுமே மகிழ்ச்சியடையவில்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

ராகுல் காந்தி பொதுக்கூட்டம் ஒன்றில் பேசுகையில், இந்துத்துவவாதிகள் தங்கள் வாழ்நாள் முழுவதையும் அதிகாரத்தை தேடி செலவிடுகிறார்கள். அவர்கள் அதிகாரத்தை தவிர வேறு எதையும் விரும்பவில்லை. அதற்காக எதையும் செய்ய முடியும். அவர்கள் சத்யாகிரகம் (உண்மை தேடல்) அல்ல, சத்யாகிரா (அதிகார தேடல்) வழியை பின்பற்றுகிறார்கள். இந்த நாடு இந்துக்களின் நாடு, இந்துத்துவவாதிகளின் நாடு அல்ல.
 இந்துத்துவவாதிகளுக்கு அதிகாரம் மட்டுமே வேண்டும். அவர்கள் 2014 முதல் ஆட்சியில் உள்ளனர். இந்த இந்துத்துவவாதிகளை ஆட்சியில் இருந்து தூக்கி எறிந்து விட்டு இந்துக்களை மீண்டும் கொண்டு வர வேண்டும் என்று தெரிவித்தார்.

ராகுல் காந்தியின் பேச்சுக்கு பா.ஜ.க. பதிலடி கொடுத்தது. பா.ஜ.க. செய்தித் தொடர்பாளர் கவுரவ் பாட்டியா கூறுகையில், தான் இந்து என்றும், இந்துத்துவவாதி அல்ல என்றும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கூறுகிறார். ஆனால் ராகுல் காந்தி இந்துவும் அல்ல, இந்துத்துவவாதியும் அல்ல. இந்துஸ்தானியும் அல்ல என்று நாடு சொல்கிறது. காரணம் காந்தி குடும்பத்தினரால் இந்து மற்றும் இந்துத்துவததை இழிவுபடுத்தும் சதி நடக்கிறது. போகா ஹராம் மற்றும் ஐ.எஸ்.ஐ.எஸ். போன்ற பயங்கரவாத அமைப்புகளுடன் இந்து அமைப்புகள் ஒப்பிடப்படுகிறது என்று தெரிவித்தார்.