×

ஸ்டாலினுக்கு முதல்வராக தகுதியில்லை- அண்ணாமலை சர்ச்சை பேச்சு

 

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு மத்தியில் ஆட்சி அமைந்து 9 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. இந்த 9 ஆண்டுகால அரசின் சாதனைகளை விளக்கும் வகையில் மே 30 முதல் ஜூன் 30 வரை நாடு முழுவதும் பொதுக்கூட்டங்களை பாஜக நடத்தி வருகிறது.  அந்தவகையில் ஓசூர் ராம்நகரில் பாஜகவின் 9 ஆண்டுகால சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. 

இதில் கலந்துகொண்டு உரையாற்றிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, “9 ஆண்டுகளில் சரித்திரத்தில் இடம்பெறக்கூடிய பல திட்டங்களை பாஜக செய்துள்ளது. செங்கோலுக்கு பிரதமர் மோடி அங்கீகாரம் கொடுத்தார். திருக்குறளை 23 மொழிகளில் மத்திய அரசு மொழிப் பெயர்த்துள்ளது. தமிழ்நாட்டில் 1.41 கோடி பேர் மத்திய அரசு மூலம் இலவச வங்கி கடன் பெற்று பயனடைந்துள்ளனர். மத்திய பாஜக அரசின் திட்டங்களால் மக்கள் பயனடைவதால் திமுக தலைவர் பாஜகவை குறைக்கூறி வருகிறார். திமுகவுக்கும் பாஜகவுக்கும் நடைபெற்றுவரும் யுத்தத்தில் பாஜக வெற்றி பெறும். விஷசாராயம் விவகாரத்தில் முதல் குற்றவாளி முதல்வர் மு.க.ஸ்டாலின், 2வது குற்றவாளி செந்தில் பாலாஜி. 3G குடும்பம் தி.மு.க... கருணாநிதி மகனாக இல்லையென்றால் ஸ்டாலினுக்கு முதல்வராக தகுதியில்லை.

ரூ.44,000 கோடி டாஸ்மாக் மூலம் வருமானம் வருகிறது என்றால் அவமானப்பட வேண்டும். நியூ இந்தியா அஷ்யூரன்ஸின் அறிக்கை அப்பட்டமான மொழித்திணிப்பும் மொழித்திமிரும் ஆகும். நீட் வருவதற்கு முன் மருத்துவ சேர்க்கை முறைகேடு நிறைந்ததாக இருந்தது. ஏழை மாணவர்களும் பயன்பெற வேண்டும் என்பதற்காகவே நீட் தேர்வு கொண்டுவரப்பட்டது” என்றார்.