×

"ஈபிஎஸ்-யின் சீக்ரெட் போன் கால்"- கோபத்தில் பொது வெளியில் போட்டுடைத்த அண்ணாமலை

 

எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக 2019 ஆம் ஆண்டு முதல் தொடர் தோல்விகளை சந்தித்து வருவதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குற்றஞ்சாட்டியுள்ளார்.

விழுப்புரம் மாவட்டம் திருவாமாத்தூரில் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, “கடந்த பாராளுமன்ற தேர்தலில் பழனிசாமி 134 வாக்குறுதிகளை கொடுத்துள்ளார். இந்த வாக்குறுதிகளை எப்படி அவர் செய்வார்? நாங்கள் மூன்றாவது முறையாக நாட்டில் பிரதமராக மோடி அவர்கள் பதவி ஏற்றுள்ளார். எங்கள் வாக்குறுதி இல்லை நாங்கள் செய்வோம், செய்ய முடியும்... இப்பொழுது விக்கிரவாண்டி தேர்தலில் போட்டியிடாததற்கு ஏற்கனவே ஒரு காரணத்தை சொல்லி பொய் சொன்னார். தற்போது ஒரு புதிய காரணத்தை சொல்லி பொய் சொல்கிறார். அதாவது ஈரோடு எலக்சன் கோல்மால் போன்று,  சட்ட ஒழங்கு சரியில்லை அதனால் நாங்கள் நிற்கவில்லை என்று சொல்கிறார். 2026 ஆம் ஆண்டு தேர்தலில் சட்டன், ஒழுங்கு சரி இல்லாமல் தான் இருக்கப்போகிறது அப்போதும் தேர்தலை புறக்கணிப்பாரா? அல்லது ஒதுங்கிக் கொள்வாரா?

எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக 2019 ஆம் ஆண்டு முதல் தொடர் தோல்விகளை சந்தித்து வருகிறது. அதிமுக கோட்டை எனக்கூறும் கோவையில் 3 சட்டமன்ற தொகுதிகளில் டெபாசிட் இழந்தது. நம்பர் ஒன் கட்சியாக இருந்த அதிமுக மக்களவை தேர்தலில் பல தொகுதிகளில் டெபாசிட் இழந்தது. ஈரோடு இடைத் தேர்தலில் ஓபிஎஸ் தரப்பு வேட்பாளரை நிறுத்த வேண்டாம் என ஈபிஎஸ் கேட்டுக்கொண்டார். ஈரோடு தேர்தலில் ஓபிஎஸ் தரப்பு வேட்பாளரை நிறுத்தாமல் வாபஸ் வாங்க செய்கிற வேலையை எடப்பாடி பழனிசாமி செய்தார், அது தனது சொந்த தொகுதி என்றும்  ஒருலட்சத்து 50 ஆயிரம் ஓட்டு வாங்குவோம் என்றும் கூறிவிட்டு பல ஆயிரக்கணக்கான வாக்கில் தோல்வியை சந்தித்தார். இது தான் ஈரோடு சீக்ரெட் என்றெல்லாம் ஓபிஎஸ்-ஐ பணிய வைத்தவர் எடப்பாடி பழனிசாமி” எனக் கூறினார்.