போயஸ்கார்டன் - சசிகலாவின் மாஸ்டர் பிளான்
ஜெயலலிதா என்ற என்றதும் நினைவுக்கு வருவது போயஸ்கார்டன். அதே போல் போயஸ் கார்டன் என்றதும் நினைவுக்கு வருவதும் ஜெயலலிதாவின் பெயர்தான். பொதுவாகவே போயஸ்கார்டன் என்றால் ஒரு செல்வாக்கு, ஒரு கம்பிரம் வந்துவிடுகிறது. இதற்காகத்தான் போயஸ் கார்டன் ஜெயலலிதாவின் வீட்டிற்கு ஆளாளுக்கு அடித்துக் கொண்டிருக்கிறார்கள்.
ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் போயஸ் கார்டனில் உள்ள அவரது வேதா இல்லம் நினைவு இல்லமாக அறிவிக்கப்பட்டது. இதற்காக நிலம் கையகப்படுத்தும் அவசர சட்டம் அப்போதைய அதிமுக அரசால் பிறப்பிக்கப்பட்டது. இல்லமும் அரசுடமையாக்கப்பட்டது.
வேதா இல்லம் ஜெயலலிதாவின் அண்ணன் பிள்ளைகளான தங்களுக்குத்தான் சொந்தம் என்று, அரசுடமையாக்கப்பட்டதற்கு எதிர்த்து தீபா- தீபக் இருவரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அதில் வெற்றியும் பெற்று வேதா இல்லத்தின் சாவியை பெற்றுக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் இந்த இல்லத்தை அவர்கள் அனுபவிப்பதில் சிக்கல் இருக்கிறது.
ஜெயலலிதா இருந்தபோது 2008 -2009 ஆம் ஆண்டு வருமான வரி கணக்கை தாக்கல் செய்யாதது தொடர்பான வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கிறது. இந்த வழக்கில் தீபக் , தீபா இருவரையும் இணைக்க உத்தரவிடப்பட்டு இருக்கிறது . இந்த வழக்கில் தீர்ப்பு வெளியாகும்போது ஜெயலலிதா தரப்பு எவ்வளவு வரி தொகையை செலுத்த வேண்டியிருக்கும் என்பது தெரியவில்லை.
ஒருவேளை மிகப்பெரிய தொகையாக இருந்தால் அதை தீபா, தீபக் இருவரினாலும் செலுத்த முடியாமல் போகும். அந்த சமயத்தில் அந்த பெரிய தொகையை செலுத்திவிட்டு தீபா- தீபா இருவருடன் போயஸ் கார்டனில் நுழைந்துவிட சசிகலா மாஸ்டர் பிளான் போட்டிருக்கிறார் என்று தகவல். போயஸ் கார்டனில் உள்ள ஜெயலலிதா இல்லத்திற்குள் சசிகலா நுழைந்துவிட்டால் புது பலம், கம்பீரம் தனக்கு கிடைக்கும் என்று அவர் நம்புவதாகவும் தகவல்.