×

பத்மபூஷன் விருதை நிராகரித்த புத்ததேவ் பட்டாச்சாரியா

 

சமூக சேவை, பொது நிர்வாகம் , இலக்கியம் , கல்வி , தொழில்நுட்பம் , அறிவியல்,  விளையாட்டு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சாதனை புரிந்த நூற்று இருபத்தி எட்டு பேருக்கு பத்ம விருதுகளை அறிவித்துள்ளது மத்திய அரசு.

 2022-ம் ஆண்டுக்கான இந்த பத்ம விருதுகள் அறிவிப்பு குடியரசு தினத்தை முன்னிட்டு அறிவிக்கப்பட்டுள்ளது.   இந்த நூற்று இருபத்தி எட்டு பேரில் மேற்கு வங்காள மாநிலத்தின் முன்னாள் முதல்வர் புத்ததேவ் பட்டாச்சார்யாவுக்கு பத்மபூஷன் விருது அறிவிக்கப்பட்டு இருக்கிறது.   விருதுகள் அறிவிக்கப்பட்ட சில நிமிடங்களிலேயே தனக்கு விருது வேண்டாம் என்று கூறியிருக்கிறார் புத்ததேவ் பட்டாச்சாரியா.

 மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த புத்ததேவ் பட்டாச்சார்யா 2000ம் ஆண்டு முதல் 2011ம் ஆண்டு வரை மேற்கு வங்காள மாநிலத்தின் முதல்வராக பதவி வகித்தவர்.   அவர் தனக்கு அறிவிக்கப்பட்ட விருதை மறுத்திருப்பதி சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

 பல துறைகளில் சிறப்பான பணி புரிந்தவர்களுக்கு மத்திய பத்ம விருதுகள் வழங்கப்படுகிறது.   அந்தவகையில் மறைந்த முன்னாள் முப்படை தளபதி பிபின் ராவத் உள்ளிட்ட 4 பேருக்கு பத்ம விபூஷண் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.    காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத்,  கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை உள்ளிட்ட 17 பேருக்கு பத்மபூஷண் விருது அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

 விளையாட்டு வீரர் நீரஜ் சோப்ரா உள்ளிட்ட 107 பேருக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது .  எழுத்தாளர் சிற்பி பாலசுப்பிரமணியம் நடிகர் சௌகார் ஜானகி ஆகிய 7 பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள்.  இவர்களுக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

இந்த நிலையில்,  தனக்கு அறிவிக்கப்பட்டுள்ள பத்மபூஷன் விருதை நிராகரித்து பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறார் புத்ததேவ் பட்டாச்சாரியா.