×

 இடைத்தேர்தல் முடிவு! வைரலாகும் கருணாநிதி டுவிட்
 

 

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி அதிக வாக்குகளை பெற்று வென்றிருக்கிறது.   ஆனால் எதிர்தரப்பினரோ பணநாயகம் வென்றது ஜனநாயகம் தோற்றது என்று கடுமையான கண்டனங்களையும் விமர்சனங்களையும் தெரிவித்து வருகின்றனர் .  

பணம், பரிசுப் பொருட்கள், சாப்பாடு எல்லாம் போட்டதால் தான் இந்த வெற்றி கிடைத்திருக்கிறது என்கிறார்கள்.   ஒரு ஓட்டுக்கு 50,000 வரை கொடுக்கப்பட்டிருக்கிறது என்கிறார் முன்னாள் அமைச்சர் உதயகுமார்.  மொத்தமாக 350 கோடி ரூபாய் வாரி இறைத்திருக்கிறது திமுக.  அதானல்தான் இந்த வெற்றி என்று சொல்கிறார்கள்.  சேலை, காமாட்சி குத்து விளக்கு,  குக்கர்,  எவர் செல்வர் குடம் , எவர்சில்வர் தட்டு,  மளிகை பொருட்கள்  வேட்டி சட்டை , துணிக்கடை கூப்பன்,  மளிகை கடை கூப்பன் என்று இத்தனையும் கொடுத்து இந்த ஓட்டை வாங்கி இருக்கிறார்கள் என்று எதிர்க்கட்சியினர் சாடி வருகின்றனர் .

தேர்தல் வரலாற்றிலேயே இதுவரை திருமங்கலம் ஃபார்முலா தான் தமிழ்நாடு முழுவதும் உலகம் முழுவதும் பேசப்பட்டது . இப்போது ஈரோடு கிழக்கு தொகுதி பார்முலாவில் மக்களை பட்டியிலடைத்து வைத்து மூளைச்சலவை செய்தது திமுக என்கிறார் முன்னாள் அமைச்சர் உதயகுமார்.

இந்த நிலையில் மறைந்த முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான கலைஞர் கருணாநிதி 2016 ஆம் ஆண்டில் நடந்த இடைத்தேர்தலில் அதிமுக வெற்றி பெற்றதற்காக ,  ’’பணநாயகம் மீண்டும் ஒருமுறை வெற்றி பெற்றுள்ளது.  அதுவே இந்த இடைத்தேர்தல்.   செயற்கையான இந்த வெற்றி நீண்ட நாளைக்கு சிறப்பை தராது ’’என்று ட்விட்டர் பக்கத்தில் அவர் பதிவிட்டிருந்ததை திமுகவிலிருந்து வெளியேறி பாஜகவில் இணைந்த திருச்சி சூர்யா சிவா அந்த ட்விட்டை தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார்.  இந்த டுவிட்டர் பதிவு வைரல் ஆகி வருகிறது.