சீட் கிடைச்சும் போச்சே..! தேம்பித் தேம்பி அழுத பகுஜன் பிரமுகர்
உத்தர பிரதேசம், உத்தரகாண்ட், கோவா ,மணிப்பூர், பஞ்சாப் ஆகிய ஐந்து மாநிலங்களுக்கு பிப்ரவரி 10ஆம் தேதி முதல் சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. இதில் உத்தரப்பிரதேசத்தில் 7 கட்ட தேர்தல் நடைபெறுகிறது.
சட்டமன்றத் தேர்தலில் ஐந்து மாநிலங்களிலும் தேர்தல் பணிகள் சூடுபிடிக்க தொடங்கி இருக்கின்றன. தேர்தல் நேரத்தில் உத்தரப் பிரதேசத்தில் ஆளும் பாஜகவிலிருந்து அமைச்சர்களும் , எம்எல்ஏக்களும் அடுத்தடுத்து விலகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றனர். யோகிக்கு நெருக்கடியை கொடுத்து வருகின்றனர்.
இந்த நிலையில் பகுஜன் சமாஜ் கட்சியைச் சேர்ந்த பிரமுகர் ஒருவர் வேட்பு மனு நிராகரிக்கப்பட்டதால் தேம்பித் தேம்பி அழும் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. அர்ஷத் ரானா என்கிற பகுஜன் சமாஜ் கட்சியை சேர்ந்த அந்த பிரமுகருக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இதையடுத்து அவர் வேட்புமனு தாக்கல் செய்ய சென்றிருக்கிறார்.
அப்போது அவரது வேட்புமனு நிராகரிக்கப்பட்டது. இதனால் கடும் அதிர்ச்சியடைந்த அவர் அந்த இடத்திலேயே தேம்பித் தேம்பி அழுதிருக்கிறார். தன்னை நம்ப வைத்து விட்டு ஏமாற்றி விட்டதாகவும் அவர் புலம்பி அழுதிருக்கிறார். இந்த வீடியோ வைரல் ஆகி உத்தரப் பிரதேச தேர்தலில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது.