முதல்வரின் நாற்காலியா நடிகை வித்யாபாலன் - சர்ச்சை வீடியோ
முதல்வரின் நாற்காலி என்று நடிகை வித்யா பாலனை குறிப்பிட்டு ஆம் ஆத்மி கட்சி வெளியிட்ட வீடியோவிற்கு காங்கிரஸ் கட்சி கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறது.
பஞ்சாப் மாநிலத்தில் கடந்த சட்டமன்ற தேர்தலில் காங்கிரசுக்கு அடுத்தபடியான இடத்தை தக்கவைத்துக் கொண்ட ஆம் ஆத்மி, நடப்பு தேர்தலில் ஆட்சியை கைப்பற்ற தீவிரம் காட்டி வருகிறது. இதற்காக முதல்வர் வேட்பாளரை தேர்ந்தெடுக்கும் பொறுப்பை மக்களிடமே அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் வழங்கியிருந்தார்.
இதற்கிடையே நேற்றைய தினம் பஞ்சாப் மாநிலத்தில் முதல்வர் வேட்பாளரை அறிவித்திருக்கிறார். அதோடு வீடியோ ஒன்றையும் அவர் வெளியிட்டிருந்தார். அதில் அம்மாநிலத்தின் முதல்வர் பதவியை பிடிக்க இருவேறு கட்சித் தலைவர்கள் மோதிக்கொள்வது போன்றும், நடிகை வித்யா பாலனை முதல்வரின் நாற்காலியை போன்று சித்தரிக்கும் காட்சி இடம்பெற்றிருந்தது.
வித்யாபாலனை பொருளாக குறிப்பிட்டுள்ளதற்கு கண்டனம் தெரிவித்துள்ள காங்கிரஸ், ’’அக்கட்சியில் ஒரு பெண் தலைவர் கூட இல்லாததற்கு காரணம் தற்போது தற்போது வெளிப்பட்டு இருக்கிறது’’ என்று கடுமையாக விமர்சித்து இருக்கிறது.