×

கொரோனாவால் வர்த்தகம் பாதிப்பு.. கோக கோலா இந்தியா லாபம் ரூ.443 கோடி..

 

கோக கோலா இந்தியா நிறுவனம் 2020-21ம் நிதியாண்டில் நிகர லாபமாக ரூ.443 கோடி ஈட்டியுள்ளது.

குளிர்பானங்கள் தயாரிப்பு நிறுவனமான கோக கோலா இந்தியா நிறுவனம் தனது 2020-21ம் நிதியாண்டு நிதி நிலை அண்மையில் நிறுவனங்கள் பதிவாளரிடம் தாக்கல் செய்துள்ளது. கோக கோலா இந்தியா நிறுவனம் 2020-21ம் நிதியாண்டில் நிகர லாபமாக ரூ.443 கோடி ஈட்டியுள்ளது. இது முந்தைய நிதியாண்டைக் காட்டிலும் 28 சதவீதம் அதிகமாகும். கடந்த 2020-21ம் நிதியாண்டில் கோக கோலா இந்தியா நிறுவனத்தின் வருவாய் 16 சதவீதம் குறைந்து ரூ.2,355 கோடியாக குறைந்துள்ளது.

தொற்றுநோயான கொரோனா வைரஸ் பரவல் மற்றும் பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக, அமல்படுத்த லாக்டவுன், இரவு ஊரடங்கு போன்ற நடவடிக்கைகள் வர்த்தகம் பாதிக்கப்பட்டது என்று கோக கோலா நிறுவனம் தெரிவித்துள்ளது. கடந்த 2020-21ம் நிதியாண்டில் கோக கோலா நிறுவனம் மொத்த செலவினமாக ரூ.1,741 கோடியாக உள்ளது.

கோக கோலா நிறுவனத்தின் துணை நிறுவனமான இந்துஸ்தான் கோக கோலா பெவேரேஜ்ஸ்,  ஜூஸ் மற்றும் ஐஸ் டீ தவிர கோக கோலா போன்ற குளிர்பானங்களை தயாரித்து பிற்பனை செய்கிறது. இந்நிறுவனத்தின் வருவாய் கடந்த 2020-21ம் நிதியாண்டில் ரூ.7,004 கோடியாக குறைந்துள்ளது. மேலும் அந்த நிதியாண்டில் இந்நிறுவனத்தின் நிகர லாபம் ரூ.72 கோடியாக குறைந்துள்ளது. இந்நிறுவனத்தின் மொத்த செலவினம் ரூ.6,902 கோடியாக உள்ளது.