14 தொகுதிகளில் போட்டியிட காங்கிரஸ் விருப்பம்?
நாடாளுமன்ற தேர்தலுக்கான தொகுதி பங்கீடு தொடர்பாக திமுக- காங்கிரஸ் இடையேயான பேச்சுவார்த்தை சென்னை அண்ணா அறிவிலாயத்தில் நடைபெற்றது.
இதில் திமுக சார்பில் டி.ஆர்.பாலு தலைமையிலான குழுவில் அமைச்சர்கள் கே.என்.நேரு , ஐ.பெரியசாமி, பொன்முடி, ஆ.ராசா, திருச்சி சிவா, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் ஆகியோர் கலந்து கொண்டனர். காங்கிரஸ் தரப்பில் முகுல் வாஸ்னிக், சல்மான் குர்ஷித், அஜோய் குமார், கே.எஸ்.அழகிரி, செல்வபெருந்தகை ஆகியோர் கலந்து கொண்டனர். சுமார் ஒரு மணி நேரம் தொகுதி பங்கீடு தொடர்பான முதல் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது.
பேச்சுவார்த்தைக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் பொதுச்செயலாளர் முகுல் வாஸ்னிக், “கூடிய விரைவில் அடுத்த கட்ட சந்திப்பு நடைபெறும். இந்த சந்திப்பு நிறைவாக இருந்தது எனவும் தெரிவித்தார். நிதிஷ்குமார் இந்தியா கூட்டணியில் இருந்து வெளியேறி பாஜகவில் இணைந்துள்ளார். பிரிவினை சக்திகளை எதிர்கொள்ள தைரியம் இல்லாதவர்கள் வெளியே செல்வார்கள். இந்தியா கூட்டணி இன்னும் ஒவ்வொரு நாளும் வலுவாக தான் மாறும், இந்தியா கூட்டணி வலிமையாக உள்ளது. இந்திய மக்கள் எங்கள் கூட்டணி பக்கம் தான் உள்ளனர்” என்றார்.
முதற்கட்ட பேச்சுவார்த்தையில் காங்கிரஸ் கட்சி 14 தொகுதிகளில் போட்டியிட விருப்பம் தெரிவித்து அதற்கான பட்டியலை கொடுத்துள்ளோம். தலைமையிடம் பேசி மீண்டும் அழைப்பதாக திமுக கூட்டணி பேச்சு வார்த்தை குழுவினர் தெரிவித்துள்ளனர்” என்றார்.