×

சமாஜ்வாடியில் இணைந்த நாட்டின் உயரமான மனிதர்.. சட்டப்பேரவை தேர்தலில் முதல் முறையாக அகிலேஷ் 
 

 

உத்தர பிரதேச சட்டப்பேரவை தேர்தலில் கர்ஹல் சட்டப்பேரவை தொகுதியில் அகிலேஷ் யாதவ் போட்டியிடுகிறார். இது அகிலேஷ் யாதவ் போட்டியிடும் முதல் சட்டப்பேரவை தேர்தலாகும்.

உத்தர பிரதேசத்தில் அடுத்த மாதம் 10ம் தேதி முதல் மொத்தம் 7 கட்டங்களாக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் உத்தர பிரதேசத்தின் முன்னாள் முதல்வரும், சமாஜ்வாடி கட்சி தலைருவருமான அகிலேஷ் யாதவ் போட்டியிடுவார் என்று தகவல் வெளியானது. அகிலேஷ் யாதவ் இதுவரை உத்தர பிரதேச சட்டப்பேரவை  தேர்தலில் போட்டியிட்டது கிடையாது. 

கடந்த முறை அகிலேஷ் யாதவ் முதல்வராக இருந்தாலும், சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட்டு எம்.எல்.ஏ.வாக தேர்வாகி முதல்வராகவில்லை. மேலவை உறுப்பினராக தேர்வாகி முதல்வரானார். தற்போது உத்தர பிரதேச சட்டப்பேரவை தேர்தலில் முதல் முறையாக அகிலேஷ் யாதவ் போட்டியிடுகிறார். சமாஜ்வாடி கட்சியின் பொதுச் செயலாளர் ராம்கோபால் யாதவ் கூறுகையில், உத்தர பிரதேச சட்டப்பேரவை தேர்தலில் கர்ஹல் சட்டப்பேரவை தொகுதியில் அகிலேஷ் யாதவ் போட்டியிடுகிறார் என்று தெரிவித்தார்.

நாட்டின் மிக உயரமான மனிதன் என்று அழைக்கப்படும் தர்மேந்திர பிரதாப் சிங் நேற்று சமாஜ்வாடி கட்சியில் இணைந்தார். தர்மேந்திர பிரதாப் சிங் சமாஜ்வாடியில் இணைந்ததை அறிவித்த அந்த கட்சியின் மாநில தலைவர் நரேஷ் உத்தம் படேல் கூறுகையில், தர்மேந்திர பிரதானின் வருகை, வரவிருக்கும் தேர்தலுக்கு முன்னதாக கட்சியை பலப்படுத்தும் என்று கூறினார்.