×

ஜெ., பணத்தில் சசிகலா, தினகரன் குடும்பத்தில் 1,000 பேர் கோடீஸ்வரர்களாகிவிட்டனர்- திண்டுக்கல் சீனிவாசன்

 

நாகை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள அதிமுக மாவட்ட அலுவலகத்தில் களஆய்வு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. முன்னாள் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், தங்கமணி, ஓஎஸ்.மணியன் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற கூட்டத்தில் நாகை கீழ்வேளூர் வேதாரணியம் உள்ளிட்ட தொகுதிகளை சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட அதிமுக தொண்டர்கள் பங்கேற்றனர். 

கூட்டத்தில் பேசிய திண்டுக்கல் சீனிவாசன். “ஒரு குடும்பமாக கூட்டணிக்கு ஆகின்ற செலவுகள் குறித்து நான் பேசினேன், இரண்டு நாட்களில் நானும் முன்னாள் அமைச்சர் தங்கமணியும் கதாநாயகனாக மாறிவிட்டோம். ஒரு குடும்பமாக பேசும்போது செலவு எவ்வளவு ஆகிறது? என்று சாதரணமாக பேசினேன். அது பெரிதாகிவிட்டது. கூட்டணி குறித்து தலைமை நிர்வாகிகள் யாரும் பேச கூடாது என்று எடப்பாடி கூறியிருக்கிறார். ஒரு குடும்பமாக எவ்வளவு செலவாகிறது என்றுதான் நான் பேசினேன், ஆனால் அதிமுகவுக்கு யாரும் கூட்டணி வருவதில்லை என்று செய்திகள் வருகிறது. நான் அப்படி பேசவில்லை.

அம்மாவுக்கு உதவியாக வந்தவர்கள் தான் சசிகலா தினகரன் உள்ளிட்டவர்கள். அவர்களால் தற்போது அம்மாவின் பணத்தை வைத்து 1000 குடும்பங்கள் கோடீஸ்வரர்கள் ஆகிவிட்டார்கள். அந்தப் பணத்தை வைத்துக்கொண்டுதான் சசிகலா, தினகரன் ஆகியோர் ஆட்சியை பிடிப்போம் என்று கூறி வருகிறார்கள்” என்றார்.