அதிமுக எங்கள் பங்காளி; எதிர்காலத்தில் அவர்கள் எங்களுடன் இணைய வாய்ப்புள்ளது- ஆர்.எஸ்.பாரதி
சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் திமுகவின் அமைப்பு செயலாளர் ஆர்.எஸ். பாரதி செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், நடிகர்கள் குறித்து எந்த ஒரு கருத்தையும் தெரிவிக்க விரும்பவில்லை. நாம் ஏதாவது பேசினால் அதனை திரித்து கூறுவார்கள். இன்னும் ஒரு ஆறு மாதம் பொறுமையாக இருக்க வேண்டும் பாராளுமன்ற தேர்தல் வரும். காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை ஆட்சி மாற்றம் ஏற்படும். அப்போது ஆளுநர் எந்த நிலைக்கு ஆளாவார் என்பது தெரியும். புரட்சி தமிழர் என எடப்பாடி பழனிசாமிக்கு பட்டம் கொடுத்துள்ளார்கள். எம்ஜிஆர் ஒரு மலையாளி, ஜெயலலிதா ஒரு கன்னடத்தவர் என எம்ஜிஆர் ஜெயலலிதாவை காட்டிக் கொடுப்பது போல் உள்ளது. நீட் வந்ததற்கு காரணமே எடப்பாடி தான். நீட் நடத்துவதற்கு எடப்பாடி தான் முக்கிய காரணம்.
அதிமுகவை அழிக்க நாங்க நினைக்கவில்லை. அவங்க எங்கள் பங்காளி, நாங்க எல்லாம் ஒரே பிராண்டு. பாஜக மற்றும் அண்ணாமலையை எடப்பாடி பழனிசாமி சொல்லியிருப்பார். டெல்லியில் இருந்து அடித்துக்கொண்டே இருந்தால் எவ்வளவுதான் தாங்குவார். அதிமுகவை எதிர்க்க எந்த கட்சியாலும், நபராலும் முடியாது என எடப்பாடி பழனிசாமி பேசுவது நகைச்சுவையாக உள்ளது. பாஜகதான் எங்கள் பகையாளி. எதிர்காலத்தில் அதிமுகவினர் வந்து எங்களோடு இணையவும் வாய்ப்புள்ளது” என்றார்.