மேடை நோக்கி திமுக மதுபாட்டில்கள் வீச்சு! சுற்றி நின்று காளியம்மாளை காத்த நாதக நிர்வாகிகள்
நாம் தமிழர் கட்சியின் மாநில பொறுப்பாளர் காளியம்மாள் மீது திமுகவினர் மது பாட்டில்களை வீசி எரிந்துள்ளனர். மேடையில் பேசிக் கொண்டிருந்தபோது இந்த செயலை செய்துள்ளனர். மேடையில் சுற்றி நின்று காளியம்மாள் மீது பாட்டில்கள் விழாதபடி காத்து நின்று இருக்கிறார்கள் நாம் தமிழர் நிர்வாகிகள். இதற்காக திமுகவினருக்கும் இதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த போலீசாருக்கும் காளியம்மாள் கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறார்.
திருவாரூர் மாவட்டத்தில் முத்துப்பேட்டை அருகே சித்தமல்லி பகுதியில் நாம் தமிழர் கட்சியின் கூட்டம் நடந்தது. நாம் தமிழர் கட்சி ஏன் எதற்கு ? விளக்க பொதுக்கூட்டம் என்ற பொதுக்கூட்டம் நடந்தது . இந்த பொதுக்கூட்டத்திற்கு கட்சியின் மாநில மகளிர் பாசறை ஒருங்கிணைப்பாளர் காளியம்மாள் பங்கேற்று பேசினார் . அவர் மேடையில் திமுகவை விமர்சனம் செய்து பேசிய போது, அந்த பகுதியில் திமுக கட்சி அலுவலகத்தில் அமர்ந்திருந்த திமுகவினர் பொதுக்கூட்ட மேடைக்கு நோக்கி ஆவேசமாக வந்தனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர்.
ஆனாலும் ஆவேசமாக மேடையில் காளியம்மாளை நோக்கி மது பாட்டில்களை தூக்கி வீசினர். மேடையில் சுற்றி நின்று காளியம்மாள் மீது பாட்டில்கள் விழாதபடி காத்து நின்று இருக்கிறார்கள் நாம் தமிழர் நிர்வாகிகள். இதிலிருந்து தப்பித்த காளியம்மாள் அந்த மது பாட்டிலை எடுத்து கையில் வைத்துக் கொண்டு, திமுகவினர் இப்படி அநாகரிகமாக செயல்படுகின்றார்களே, பெண்ணியம் பற்றி பேசும் ஒரு கட்சியில் இருந்து.. பெண்ணுரிமை பற்றி பேசும் ஒரு கட்சி இருந்து இப்படியா திமுகவினர் பெண்களுக்கு எதிராக செயல்படுகின்றார்கள் என்று ஆவேசப்பட்டார்.
என் மேல் சிறு கீறல் விழுந்தாலோ என் கட்சியினருக்கு ஏதும் ஆனாலும் அதற்கு திமுகவும் காவல்துறையும் தான் பொறுப்பு என்று ஆவேசப்பட்டார்.
காளியம்மாள் மது பாட்டில் வீசப்பட்டதை அடுத்து காளியம்மாளை சுற்றி நாம் தமிழர் கட்சியினர் பாதுகாப்பாக நின்று கொண்டனர். ஆவேசமாக இருந்த திமுகவினரை அங்கிருந்த ஒரு கடைக்குள் போலீசார் இழுத்துச் சென்று அடைத்து வைத்தார்கள். அதன் பின்னர் தொடர்ந்து நாம் தமிழர் கட்சியினர் பொதுக்கூட்டம் நடந்தது.
காளியம்மாளை ஆவேசமாக திட்டிக்கொண்டு செருப்பை கையில் எடுத்துக்கொண்டு மேடையை நோக்கி திமுகவினர் பாய்ந்து வந்ததால் பதிலுக்கு நாம் தமிழர் கட்சியினரும் ஆவேசமாக பாய்ந்தார்கள். அப்போது மேடையில் இருந்த நாம் கட்சி நிர்வாகிகள் வேண்டாம் வந்து விடுங்கள் போலீஸ் பார்த்துக்கொள்வார்கள் என்று சொல்ல நாம் தமிழர் கட்சியினர் திரும்பி விட்டனர். ஆனால் கடைசி வரைக்கும் திமுகவினர் சத்தம் போட்டு ரகலில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். இது தொடர்பான வீடியோ வலைத்தளங்களில் வைரல் ஆகி வருகிறது.