×

விஜயகாந்த் மகன் சின்னப் பையன் என்று நினைக்காதீங்க.. விஜய பிரபாகரன் ஆவேசம்
 

 

விஜயகாந்தின் மகன் சின்ன பையன் என்று நினைக்காதீர்கள்.  நான் விஜயகாந்த் -பிரேமலதா இரண்டும் சேர்ந்த விஜயபிரபாகரன் என்று ஆவேசப்பட்டுள்ளார்  விஜய பிரபாகரன். இந்த வீடியோ வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.  

 ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் தேமுதிக போட்டியிடுகிறது .  தேமுதிக வேட்பாளரை ஆதரித்து விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரன் பிரச்சாரம் மேற்கொண்டுள்ளார் .  அப்போது சிலர் அங்கு பிரச்சாரம் செய்ய எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். 

கட்சி நிர்வாகிகள் அவர்களை சமாதானம் செய்துள்ளனர்.  ஆனாலும் அவர்கள் சமாதானம் அடையவில்லை.  இதனால் ஆவேசம் அடைந்து விஜய பிரபாகரன்,  இந்த சவுண்டு எல்லாம் இங்க விடக்கூடாது.  முறையாக அனுமதி வாங்கித் தான் பிரச்சாரம் செய்கிறோம் என்று ஆவேசப்பட்டு இருக்கிறார்.

 அவர் மேலும் , விஜயகாந்த் மகன் சின்னப்பையன் என்று நினைக்காதீர்கள்.  மக்களுக்கு பிரச்சினை என்றால் உடனடியாக வந்து நிற்பேன் என்று மேலும் ஆவேசப்பட்டவர்,    நீங்கள் விஜயகாந்த் ,பிரேமலதா இருவரையும் பார்த்திருக்கலாம்.  நான் இரண்டு பேரும் சேர்ந்த விஜய பிரபாகரன் . நீங்கள் பார்த்திருக்க மாட்டீர்கள் என்று ஆவேசப்பட்டு எச்சரித்துள்ளார்.

விஜய பிரபாகரனின் இந்த ஆவேச பேச்சு  கூட்டத்தில் சிறுது நேரம் பரபரப்பையும் சலசலப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது.  இது குறித்த வீடியோ வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.