உன்ன மாதிரி உசுரோட ஆட்டை மசுரோட முழுங்க மாட்டாரு.. எடப்பாடி மீது கடும் தாக்கு
ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின்னர் அதிமுகவின் பொதுச் செயலாளர் ஆன சசிகலா அடுத்து முதல்வர் பொறுப்பையும் தான் ஏற்க வேண்டும் என்று வம்படியாக பேசி பன்னீர்செல்வத்தை முதல்வர் பொறுப்பிலிருந்து வாபஸ் வாங்க சொன்னார் சசிகலா . இதனால் ஆத்திரம் கொண்டு பன்னீர்செல்வம் தர்மயுத்தம் தொடங்க, அந்த நேரத்தில் சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா சிறைக்கு செல்ல வேண்டியது இருந்ததால், எடப்பாடி பழனிச்சாமியை நம்பி அவரை முதல்வர் ஆக்கினார் சசிகலா.
அதற்காக, சசிகலாவை கட்சியை விட்டே நீக்கினார் எடப்பாடி பழனிச்சாமி. சசிகலாவுக்கு எதிராக தர்ம யுத்தம் நடத்திக் கொண்டிருந்த பன்னீர்செல்வத்தை அதிமுகவிற்கு கொண்டு வந்து கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஆக்கினார். பின்னர் ஒற்றைத் தலைமை விவகாரம் வந்தபோது அதிமுகவின் பொது செயலாளர் ஆக வேண்டும் என்கிற முடிவுக்கு வந்து, பன்னீர்செல்வம் திமுகவினருடன் தொடர்பில் இருக்கிறார். முதல்வர் ஸ்டாலினை தனியாக சந்தித்து பேசினார் என்று குற்றம் சாட்டி அவரை அதிமுகவிலிருந்து நீக்கினார் எடப்பாடி பழனிச்சாமி .
அதன் பின்னர் பன்னீர்செல்வமும் பழனிச்சாமியும் இணைய வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வந்தும் கூட இணைப்பு சாத்தியமே இல்லை என்று உறுதியாக இருக்கிறார் பழனிச்சாமி.
இந்த நிலையில் பன்னீர் செல்வத்தின் ஆதரவாளர் மருது செல்வராஜ் , இந்த விவகாரங்கள் குறித்து தனது வலைத்தள பக்கத்தில் இவ்வாறு பதிவிட்டிருக்கிறார்.
’’ஏற்கனவே முதலமைச்சர் ஸ்டாலினை ஓ.பி.எஸ் தனியாக சந்தித்து பேசினார்னு எடப்பாடி சொன்னப்ப, நீ மட்டும் அதை நிரூபிச்சா..நானும் எனது அரசியல் சகாக்களும் அரசியலை விட்டே போயிடுறோம். அப்படி நிரூபிக்க முடியாவிட்டால் நீ மட்டும் அரசியல்ல இருந்து போயிடனும்னு அண்ணன் ஓ.பி.எஸ் சவால் விட்டாரே. இது குறித்து இன்று வரை பதில் பேசாது நவ துவாரங்களையும் பொத்திக் கொண்ட ஈ.பி.எஸ் இப்போது தூதூவிட்டாரு காது விட்டாருன்னு புழுகுறது அவரது மலிவான பித்தலாட்டத்தையே காட்டுகிறது. எடப்பாடிக்கு பல்லும் சரியில்ல சொல்லும் சரியில்லை..’’
’’கலெக்டர் விடுமுறையில் சென்றால்
டிஆர்ஓ இன்சார்ஜ் ஆக இருப்பார் !
எடப்பாடி
சரி தான்..
ஆனா
அதே கலெக்டர் லீவு முடிஞ்சு வந்ததும்
அதே டிஆர்.ஓ. அதிகாரத்தை கலெக்டருக்கிட்ட திருப்பி ஒப்படைச்சுருவாருல்ல..
உன்னை மாதிரி உசுரோட ஆட்டை மசுரோட முழுங்க மாட்டாரு..’’