×

கண்ணாடி கூண்டில் இருந்து கல் ஏறியக்கூடாது! அண்ணாமலைக்கு அட்வைஸ்

 

பெங்களூரில் நடந்த குண்டுவெடிப்பையும் குஜராத்தில் நடந்த தொங்கு பாலம் விபத்தையும் பேசாத பாஜக தலைவர் அண்ணாமலை, தமிழக அரசை பற்றி குறை சொல்வது  கண்ணாடி கூண்டில் இருந்து கல் ஏறிவது போல் உள்ளது என மதிமுக தலைமைக் கழக செயலாளர் துரை வைகோ தெரிவித்துளார்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே வில்லிசேரி கிராமத்தில் புதிதாக இந்தியன் வங்கி அமைய உள்ள இடத்தை மதிமுக தலைமை கழக செயலாளர் துரை வைகோ நேரில் சென்று பார்வையிட்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “வில்லிசேரி கிராமத்தினர் வங்கிக்கு செல்ல வேண்டும் என்றால் சுமார் 18 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கோவில்பட்டிக்கு செல்ல வேண்டி உள்ளது. எனவே வைகோ அவர்களின் கோரிக்கையை ஏற்று ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இப்பகுதியில் வங்கி அமைக்க உத்தரவிட்டுள்ளார். தலைமை தேர்தல் அதிகாரியாக இருந்தாலும் சரி தமிழக ஆளுநராக இருந்தாலும் சரி பொதுவான நபராக இருக்க வேண்டும் தனிப்பட்ட ஒரு அரசியல் கட்சி அந்த அரசியல் கட்சிகளின் சித்தாந்தங்களுக்கு ஏற்ப நடந்து கொள்வது தான் பிரச்சனை இதை நீதிமன்றமே கண்டனம் தெரிவித்துள்ளது

மொழி, சாதி,மத ரீதியாக பிளவு படுத்தும் நோக்கில் பாஜக செயல்படுகிறது என்று ராகுல்காந்தி கூறியிருப்பது நூற்றுக்கு நூறு உண்மையான கருத்து ஆகும். கோவையில் நடந்த குண்டு வெடிப்பு போலீசாரின் கவனக்குறைவு என்று இங்குள்ள பாஜக தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார்.ஆனால்  மங்களூர் குண்டு வெடிப்பு சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளி கர்நாடக மாநிலம் ஷிமோகா என்ற இடத்தில் ஒத்திகை பார்த்துள்ளார். அதேபோல் பெங்களூரில் 2020ல் நடந்த கலவரத்திலும் ஈடுபட்டுள்ளார். இப்படி 2 வருடமாக குற்றச்செயல்களில் ஈடுபட்டிருந்தவரை கர்நாடகத்தை ஆளும் பாஜக அரசு ஏன் அவரை கைது செய்யவில்லை. 


தமிழகத்திற்கு ஒரு நியாயம், கர்நாடகத்திற்கு ஒரு நியாயமா? குஜராத்தில் தொங்கு பாலம் அறுத்து நூற்றுக்கும் மேற்பட்டோர் இறந்தனர்.இதுவரை எப்ஐஆர் கூட பதிவு செய்யவில்லை. இதற்கு அங்குள்ள ஐகோர்ட் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. எனவே பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கண்ணாடி கூண்டில் இருந்து கல் ஏறியக்கூடாது” என கூறினார்.