×

அதிமுக உட்கட்சி பிரச்சனையை சட்டமன்றத்திற்குள் கொண்டு வரக்கூடாது! எம்எல்ஏக்களுக்கு இபிஎஸ் அறிவுறுத்தல்

 

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாவட்ட செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. 

ஆலோசனைக் கூட்டத்தில், அதிமுக பொன்விழா நிறைவு மற்றும் 51ஆம் ஆண்டு தொடக்க விழா கொண்டாட்டம் தொடர்பாக நலத்திட்ட உதவிகள் வழங்குவது, பொதுக்கூட்டம் நடத்துவது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது. அதிமுக உட்கட்சி பிரச்னையை சட்டமன்றத்திற்குள் கொண்டு வரக்கூடாது எனவும், மக்கள் பிரச்சனை, தொகுதி சார்ந்த பிரச்னைகளை மட்டுமே சட்டமன்றத்தில் பேச வேண்டும் எனவும் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு எடப்பாடி பழனிசாமி ஆலோசனை கூட்டத்தில் அறிவுறுத்தியுள்ளார். அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களும் பேரவை நாட்களில் முழுமையாக கலந்து கொள்ள வேண்டும் என மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் அதிமுக எம்.எல்.ஏக்களுக்கு எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். 

இந்த சூழலில் சென்னை ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள தனியார் ஹோட்டலில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் மாவட்ட செயலாளர்களுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருவது குறிப்பிடதக்கது.