×

அதிமுகவை யாராலும் பிளவுப்படுத்த முடியாது- எடப்பாடி பழனிசாமி

 

திண்டுக்கல் மேற்கு மாவட்டம் ஒட்டன்சத்திரம் கிழக்கு ஒன்றிய செயலாளர் நடராஜன் அவர்களின் மகள் சத்தியசீலா திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி கே பழனிச்சாமி அவர்கள் கலந்து கொண்டார். 

திண்டுக்கல் கிழக்கு மற்றும் மேற்கு மாவட்ட கழக செயலாளர் ஆன முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் மற்றும் திண்டுக்கல் சீனிவாசன் ஆகியோர் தலைமையில் பிரம்மாண்ட வரவேற்பு வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து திருமண விழாவில் கலந்து கொண்ட இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மணமக்களை வாழ்த்தி நினைவு பரிசுகளை வழங்கினார்.

திருமண விழாவில் பேசிய எடப்பாடி பழனிசாமி, “நான் பொறுப்பேற்றிலிருந்து இன்று வரை போராடிக் கொண்டுதான் இருக்கிறேன். ஆட்சியில் இருக்கும் போதும் போராடிக் கொண்டுதான் இருந்தேன்.எதிர் கட்சியாக இருக்கும் போதும் போராடி கொண்டுதான் இருக்கிறேன். போராட்டம் போராட்டம் என்று தாண்டி வெற்றியை பெற்றுக் கொண்டு இருக்கிறேன். அதிமுக வலிமையுடன் கொடியுடன் திகழ்ந்து கொண்டிருக்கிறது. அதிமுகவை பல பேர் விலக்க நினைக்கிறார்கள். ஒரு போதும் நடக்காது. மக்கள் சக்தி உள்ள இயக்கம். எவராலும் ஒருபோதும் கட்சியை பிளவு படுத்த முடியாது” எனக் கூறினார்.