×

எடப்பாடியார்!  ஒரு அடிமட்ட தொண்டர்  அதிமுகவின் பொதுச்செயலாளர் ஆக உயர்ந்த கதை!(படங்கள்) 
 

 

விவசாய குடும்பத்தில் பிறந்து வளர்ந்த எடப்பாடியார்  எம்.ஜி.ஆர் மேல் இருந்த பிரியத்தில் அவருக்கு ரசிகர் மன்றம் தொடங்கி பின்னர் அதிமுகவின் அடிப்படை உறுப்பினராக அடிமட்ட தொண்டராக இருந்தவர் இன்று அக்கட்சியின் பொதுச்செயலாளராக உயர்ந்திருக்கிறார்.

1954 ஆம் ஆண்டில் சாதி, மதம், அரசியல் வேறுபாடு இதையெல்லாம் தாண்டி எல்லோராலும் கொண்டாடப்படுகின்ற பெருந்தலைவர் காமராஜர் முதல் முதலாக தமிழக முதல்வராக பொறுப்பேற்ற வருடம் அது . அதே வருடத்தில் மே 12ஆம் தேதி சேலம் மாவட்டத்தில் உள்ள சிலுவம்பாளையம் என்கிற ஒரு சின்ன கிராமத்தில் ஒரு விவசாய குடும்பத்தில் பிறந்தவர் தான் இன்னைக்கு அதிமுகவின் பொதுச்செயலாளராக ஆகி இருக்கும் எடப்பாடியார்.

 ஆரம்ப பள்ளியில் படிப்பதற்கு நாலு மயில் தூரம் தினமும் நடந்து சென்றவர் எடப்பாடியார்.  17 வயதில் புரட்சித் தலைவர் எம்ஜிஆர் மேல் இருந்த தீராத பற்றினால் அவருக்காக ரசிகர் மன்றம் தொடங்கினார்.  பின்னர் அதிமுகவின் தொண்டரானார்.  அன்றைக்கு தொடங்கியது தான் இன்றைக்கு அதிமுகவின் பொதுச் செயலாளர் ஆகியிருக்கிறார்.

 கட்சிக்காக முழு அர்ப்பணிப்பு உணர்வுடன் செயல்பட்டதால் 18 வயதிலேயே சிலுவம்பாளையம் கிளைக் கழக அதிமுக செயலாளர் பதவி அவரை தேடி வந்தது . 21 வயதில் கல்லூரி படிப்பை முடித்த உடனே வெள்ள மூட்டைகளை வியாபாரம் செய்து சுய தொழில் தொடங்கினார். 

 1982 ஆம் வருடத்தில் எடப்பாடி ஒன்றிய கழகச் செயலாளராக நியமிக்கப்பட்டார்.  1985 ஆம் ஆண்டில் சேலத்தில் ஜெயலலிதா பேரவையை தொடங்கினார்.  1987 ஆம் ஆண்டில் எம்ஜிஆரின் மறைவுக்கு பின்னர் ஜெயலலிதா அரசியல் தலைமையை ஏற்றுக் கொண்டார்.  1989 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் எடப்பாடி தொகுதியில் போட்டியிட்டு வெற்றியும் பெற்று தனது 35 வது வயதில் முதன் முதலாக சட்டமன்றத்தில் காலடி வைத்தார்.

 1990 ஆம் ஆண்டில் ஜெயலலிதாவால் சேலம் வடக்கு மாவட்டத்திற்கு இணைச் செயலாளராக நியமிக்கப்பட்டார்.  1991இல் மறுபடியும் எடப்பாடி தொகுதியில் இருந்து சட்டமன்றத்திற்கு உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.   கொள்கை பரப்புச் செயலாளராக கழகத்தில் மிக முக்கியமான பொறுப்பு.  1983இல் எப்படி புரட்சித்தலைவர் புரட்சித்தலைவிக்கு இந்த பதவியை வழங்கினாரோ அதே மாதிரி 2001 இல் எடப்பாடி யாருக்கு இந்த பதவியை கொடுத்து பெருமைப்படுத்தினார் ஜெயலலிதா.  அதே வருடத்தில் சேலம் மாவட்ட செயலாளர் பொறுப்பும் அவருக்கு கொடுக்கப்பட்டது.

 எத்தனை தடைகள் வந்தாலும் அதை எல்லாம் பொறுமையாக தாண்டி வெற்றி கொடி நாட்டுவது தான் எடப்பாடியாருக்கு அழகு.  1998 இல் இருந்து 2010 வரை அரசியலில் பல ஏற்றத்தாழ்வுகளை சந்தித்த எடப்பாடியார் 2011 தேர்தலில் தன் சொந்த தொகுதியான எடப்பாடியில் வெற்றி பெற்றார்.  அதுமட்டுமல்லாமல், சேலத்தில் இருக்கும் 11 தொகுதிகளில் 10 தொகுதிகளை அதிமுக வெற்றி பெற வழி செய்தார்.  இது ஜெயலலிதாவுக்கு அவர் மேல்  இருந்த நம்பிக்கையை இன்னும் அதிகமாக்கியது.  இதனால் அவரை நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகம் துறைக்கு அமைச்சர் ஆக்கினார் ஜெயலலிதா.

 அது மட்டுமில்லாமல் கட்சியில் எல்லோரையும் ஒருங்கிணைத்துப் போகிறார் என்பதால் அமைச்சர்களுக்குள் ஒருங்கிணைப்பாளராகவும் செயல்பட்டார் எடப்பாடி யார்.   ஒரு கட்டத்தில் கட்சியின் வருவாய் அனைத்தும் எடப்பாடியாரே கவனித்து வந்தார்.   2016 ஆம் ஆண்டு தேர்தலில் எடப்பாடி தொகுதியில் மீண்டும் வெற்றி பெற்றார்.   அதே வருடம் முதலமைச்சர் ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் கட்சியினரோட ஏகோபித்த ஆதரவோடு முதன்முதலாக முதல்வர் பதவியில் அமர்ந்தார். எடப்பாடியார்.  அடுத்து அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளராக இருந்தவர் இன்று அதிமுகவின் பொதுச்செயலாளர் ஆகி இருக்கிறார்.