×

கடுப்பான அமைச்சர்! தமிழக எம்பிக்களுக்கு எச்சரிக்கை நோட்டீஸ்! 

 

தமிழக எம்பிக்கள் சிலருக்கு மத்திய நகர்ப்புற அமைச்சகத்தில் இருந்து எச்சரிக்கை விடுத்து நோட்டீஸ் அனுப்பப்பட்டு இருக்கிறது.  

 டெல்லியில் எம்பிக்களுக்கு அரசு தரப்பில் பங்களா ஒதுக்கப்படுகிறது.  அல்லது பெரிய அப்பார்ட்மெண்ட் ஒதுக்கப்படுகிறது.   தவிர கெஸ்ட் ஹவுஸ்களாக பயன்படுத்த அரசு வீடு அல்லது அப்பார்ட்மெண்ட் ஒன்றையும் இந்த எம்பிக்கள் அரசிடம் இருந்து பெற்றுக் கொள்ளும் வசதி இருக்கிறது.  

 ஆனால் இதற்கு வாடகை செலுத்த வேண்டும்.   இப்படி தமிழக எம்பி களில் சிலர் கெஸ்ட் அப்பார்ட்மெண்டுகளை வாங்கி வேறு நபர்களுக்கு வாடகைக்கு விட்டு உள்ளார்கள்.   வெளிநாட்டு தூதரகங்களில் பணி புரிகின்றவர்கள்,  தனியார் நிறுவனங்களில் வேலை செய்கின்றவர்கள் என்று பலர் இந்த அப்பார்ட்மெண்டுகளில் வாடகைக்கு இருக்கின்றார்கள். 

 இவர்களிடமிருந்து எம்பிக்கள் வாடகையை பெற்றும் கூட மத்திய அரசுக்கு செலுத்த வேண்டிய வாடகையை செலுத்தாமல் இருக்கிறார்கள்.   இதனால் இந்த துறையின் அமைச்சர் ஹிர்தீப் சிங் பூரி தமிழக எம்பிக்களுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டிருக்கிறார்.   பல லட்சம் ரூபாய் வாடகை பாக்கி இருக்கிறது.  அதை உடனே கட்ட வேண்டும்.   கட்டாவிட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது . 

இதை அடுத்து ஆடிப் போய் இருக்கும் எம்பிக்கள் சீனியர் பாஜக தலைவர்களை சந்தித்து நோட்டீசை வாபஸ் வாங்க முயன்று வருகின்றார்கள் என்று தகவல்.