×

உங்களுக்கும் என் நிலைமை தானா? ஆர்.எஸ்.பாரதிக்கு காயத்ரி ரகுராம் கேள்வி

 

சென்னை ஆர்.ஏ.புரத்தில் நடைபெற்ற மறைந்த முன்னாள் எம்.பி ஜின்னா படத்திறப்பு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றிய  திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, திமுகவில் உழைக்காதவர்களுக்கு பதவி கிடைத்துள்ளது எனவும் உழைத்தும் பதவி கிடைக்கவில்லை என ஆதங்கத்துடன் இருப்பது நியாயம் தான் என்றும் தெரிவித்திருந்தார். 

மேலும், உழைத்தவர்களுக்கு சீட் இல்லை, உழைக்காதவர்கள் பதவிக்கு வந்துள்ளதாகவும் விமர்சனத்துக்குள்ளானது. அதுமட்டுமின்றி கட்சிக்கு நான் அழைத்துவந்தவர்கள் எல்லாம் எம்.எல்.ஏ, மந்திரி ஆகிவிட்டதாக ஆர்.எஸ்.பாரதி கூறியிருந்தார். கட்சிக்கு உண்மையாக இருப்பவர்களை ஒதுக்கத்தான் செய்வார்கள் எனவும், ஒரே கட்சி, ஒரே கொடி என இருந்த எனக்கு 63 வயதில் தான் எம்.பி. பதவி கிடைத்தது என ஆதங்கத்தை வெளிப்படுத்தியிருந்தார்.

null