எதிர்க்கட்சி தலைவரின் செயல்பாடுகள் எப்படி? லயோலா கள ஆய்வு சொல்வதென்ன?
எடப்பாடி பழனிச்சாமி ஆட்சியை சிறந்த ஆட்சி என்று லயோலா கல்லூரியின் முன்னாள் மாணவர்கள் நடத்திய கள ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.
லயோலா கல்லூரியின் முன்னாள் மாணவர்கள் உருவாக்கிய இந்திய அரசியல் ஜனநாயக யுக்திகள் எனும் அமைப்பு தமிழக மக்களை மையப்படுத்தி பிரச்சாரங்களையும் பயிலரங்குகளையும் இந்திய அரசியல் ஜனநாயக ஜனநாயக யுக்திகள் கள ஆய்வு தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது.
தற்போது உள்ள அரசியல் நிலைகள் மற்றும் ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதியில் பல்வேறு தலைப்புகளில் கருத்துக்கணிப்புகளை நடத்தியது. தமிழகத்தில் தற்போது இருக்கும் முதல்வர் ஸ்டாலின் ஆட்சி சிறப்பான ஆட்சியா? முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் முந்தைய ஆட்சி சிறப்பான ஆட்சியா? என்ற கேள்விக்கு, முன்னாள் முதல்வர் எடப்பாடி யார் தலைமையிலான ஆட்சிக்கு 53% வாக்களித்து உள்ளனர். ஸ்டாலினுக்கு 42% வாக்களித்துள்ளனர்.
அதே போல், மது பிரச்சனையை கையாளும் விதத்தில் மோசம் என்று 77.9% திமுக அரசுக்கு வாக்களித்துள்ளார்கள். விலைவாசி உயர்வு மற்றும் அரசு துறைகளில் ஊழலை கட்டுப்படுத்துதல் போன்ற விவகாரத்தில் மோசம் என்று 80 சதவீதத்தினர் வாக்களித்துள்ளனர்.
ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதியில் எந்த இடைத்தேர்தலிலும் இல்லாத அளவிற்கு இந்த தேர்தலில் பணப்புழக்கம் அதிகரித்துவிட்டது. ஆளுங்கட்சியினர் வாக்காளர்களுக்கு அதிக பணம் கொடுக்க இருப்பதாக தெரிவித்துள்ளார்கள். அதேபோன்று தமிழகத்தில் முதலமைச்சர் ஆக ஸ்டாலின் இருப்பதை ஈரோடு கிழக்கு தொகுதி மக்கள் விரும்புகிறார்களா என்ற கேள்விக்கு, ’விரும்பவில்லை ’என்று 51% வாக்களித்துள்ளனர். தமிழகத்தில் எதிர்க்கட்சித் தலைவரின் செயல்பாடுகள் குறித்து என்ன நினைக்கின்றீர்கள் என்ற கேள்விக்கு, 49 சதவீதத்தினர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.