×

அந்த 2 கார்கள்  எப்படி வந்தன?  அமைச்சர் சேகர்பாபு விளக்கம்

 

குற்றச்சாட்டுகள் வலுத்து வருவதால் அந்த இரண்டு கார்கள் எப்படி வந்தன என்பது குறித்து விளக்கம் அளித்து இருக்கிறார் இந்த சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு .  

திமுக ஆட்சிக்கு வந்த பின்னர் சமயபுரம் கோயிலின் சேமிப்பு நிதியில் 422 கோடி ரூபாய் குறைந்து இருக்கிறது என்றும்,  அந்த நிதியில் இருந்து தான் இரண்டு கார்கள் வாங்கப்பட்டு இந்து சமய அறநிலையத்துறை ஆணையரகத்திற்கு இணை ஆணையர் மூலம் வழங்கப்பட்டுள்ளது என்று ரமேஷ் என்கிற நபர் சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து குற்றச்சாட்டுகளை சுமத்தி வந்துள்ளார்.

 சென்னை தேனாம்பேட்டை அண்ணா அறிவாலயத்தில் அமைச்சர் சேகர்பாபு இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்து பேசியபோது,   சமயபுரம் கோவிலில் வைப்பு நிதி  113 கோடி ரூபாய்க்கு மேல் உயர்ந்திருக்கிறது.   கோயில் நிர்வாகத்திற்கு பழைய கார்களுக்கு பதிலாக புதிய கார்களை வாங்குவது வழக்கமானது.  இதில் எந்த குற்றமும் இல்லை என்று கூறி இருக்கிறார்.

 சமயபுரம் கோயிலில் வைப்பு நிதி காணாமல் போயிருந்தாலும் வேறு பயன்பாட்டுக்கு பயன்படுத்தப்பட்டிருந்தாலும் வைப்பு நிதி  எப்படி உயர்ந்திருக்கும் என்று கேள்வி எழுப்பி இருக்கிறார்.

 இந்து சமய அறநிலையத்துறைக்கு கலங்கத்தை ஏற்படுத்தி தங்கள் பணி வேகத்தை குறைக்கும் நப்பாசையில் இப்படி விஷம பிரச்சாரங்கள் செய்யப்பட்டுள்ளது என்று சமயபுரம் கோயிலின் நிதி தவறான தகவல் பரப்பி வரும் மீது இந்து சமய அறநிலையத்துறையின் இணை ஆணையர் மூலம் புகார் அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.