×

கருணாநிதிக்கு ஜோசியர் சொன்னார்..ஸ்டாலினுக்கு யார் சொன்னார்?
 

 

மூடநம்பிக்கைகளை குறிப்பாக கடவுளை வணங்குவதை எதிர்க்கும் இயக்கம் என்று சொல்லிவிட்டு  மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி தனது கடைசிகாலத்தில் மஞ்சள் துண்டு அணிந்ததால் கடும் விமர்சனத்திற்கு உள்ளானார்.  ஜோதிடர் ஒருவர் சொன்னதால்தான் அவர் மஞ்சள் துண்டு அணிகிறார் என்று அப்போது விமர்சனங்கள் எழுந்தன.

தற்போது முதல்வர் மு.க.ஸ்டாலின்,  ‘’மீண்டும் மஞ்சப்பை’’கொண்டுவர தீவிர பிரச்சாரம் செய்து வருகிறார். மஞ்சப்பை என்பதை அவமானமாக பார்க்கும் பலரும் இருக்கத்தான் செய்கிறார்கள்.   அதனால்தான், ’’அரசு மட்டும் நினைத்தால் பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைக்க முடியாது; மக்கள் தான் நிராகரிக்க வேண்டும். இயற்கையை கெடுக்கும் பிளாஸ்டிக் பையை விடுத்து, மீண்டும் மஞ்சள் பை எடுத்துச் செல்வோம். மஞ்சள் பை அவமானத்தின் அடையாளம் அல்ல; சுற்றுச்சூழல் காப்பவர் என்ற உயரிய அடையாளம் என்பதை நிரூபித்துக் காட்டுவோம்’’ என்கிறார் முதல்வர்.

பிளாஸ்டிக்கை ஒழிக்க துணிப்பை, பேப்பர் பை என்பதை எல்லாம் பலரும் வலியுறுத்தி வரும் நிலையில்,  குறிப்பாக மஞ்சள் பை என்பதை ஏன் முதல்வர் வலியுறுத்துகிறார் என்று கேள்வி எழுப்புகிறார் தமிழக பாஜக செய்தி தொடர்பாளர் எஸ்.ஆர்.சேகர்.

அவர்,

’’யாருமே 
சொல்லாததை
நினைக்காததை
முதல்வர் ஏன் சொல்கிறார்?

அப்பாவிற்கு 
மஞ்சள் துண்டு ராசி
பரிகார கலர்
ஜோசியர் சொன்னது

முதல்வருக்கு
என்ன "காரர்" ?
எந்த"சியர்"சொன்னார்?

துணியில் மஞ்சப்பையும்
முகத்தில்
மஞ்சள் பூசுவதும்

இயற்கையோடு
இணைந்தது
ஆரோக்யமானது’’
- என்கிறார்.

----------------