×

அதிமுக ஒன்றாக இருந்தாலும், மூன்றாக இருந்தாலும் பாஜக கட்டுப்பாட்டுக்குள் தான் இருக்க போகிறது- கே. பாலகிருஷ்ணன்

 

இடது சாரி எழுத்தாளர்களும், முதுபெரும் தோழர்களான மறைந்த திரு. கு. சின்னப்ப பாரதி மற்றும் திரு.பழனிசாமி ஆகியோரின் படத்திறப்பு விழா நாமக்கல்லில் இன்று மாலை நடைபெற்றது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாநில  செயலாளர் திரு.கே. பாலகிருஷ்ணன் அவர்களது படங்களை திறந்து வைத்து மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் இன்று முதல் வரும் செப்டம்பர் 5-ந் தேதி வரை மோடி அரசை கண்டித்து மக்கள் சந்திப்பு இயக்கத்தை துவக்கியுள்ளோம். தமிழகம் முழுவதும் 5 ஆயிரம் குழுக்கள் அமைத்து 50 இலட்சம் வீடுகளுக்கு சென்று மக்களை சந்தித்து மோடி அரசின் மோசமான கொள்கை, பொருளாதாரம், மத அரசியல் குறித்து பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளோம். செப்டம்பர் 5 -ந் தேதி நிறைவு நாளில் சென்னையில் பிரச்சார பொதுக்கூட்டம் நடைபெறுகிறது.

தமிழக ஆளுநர் அடிக்கடி எதற்கு டெல்லிக்கு போய் வருகிறார் என தெரியவில்லை.மாநில ஆளுநர் மாநில அரசு திட்டங்களுக்கு ஒப்பதல் அளிக்கலாம். பல்கலைக்கழகத்தில் துணைவேந்தர்கள் நியமன அதிகாரத்தை தமிழக அரசே எடுத்து கொள்ள வேண்டும் என சட்ட திருத்த மசோதா ஏப்ரலில்  நிறை வேற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பட்டன. ஆளுநர் ஒப்புதல் கொடுக்க முடியாது என திருப்பி அனுப்புகிறார்.துணைவேந்தர்களை அரசு நியமித்தால் அரசியல் தலையீடு, முறைக்கேடுகள் நடக்கும். ஆளுநர்களால் நியமிக்கப்பட்ட துணை வேந்தர்களே முறைக்கேட்டில் ஈடுபட்டுள்ளனர் அவர்களை நீதிமன்றம் நீக்கியுள்ளது. ஆளுநர் பல்கலைக்கழகங்களை வைத்துக்கொண்டு  மாநில அரசுக்கு எதிராக போட்டி ஆட்சியை நடத்தி வருகிறார்.

மத்திய அரசு பல பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்கப்பட்டதால் பொதுத்துறையில் இட ஒதுக்கீடு என்பது பலன் அளிக்காது. தனியார்த்துறையிலும் இடஒதுக்கீடு கொள்ளை யை நாடாளுமன்றத்தில் சட்டத்தை மத்திய அரசு கொண்டு வரவேண்டும். மாநில அரசு அதனை வலியுறுத்த வேண்டும். இடஒதுக்கீட்டை ஏற்படுத்த சாதி வாரியான கணக்கெடுப்பை நடத்த வேண்டும். தமிழகத்தில் மேற்கு மாவட்டங்களில் ஜவுளித்தொழில் முடங்கியுள்ளது.நூல் விலை உயர்வு, பருத்தி விலை உயர்வால் தொழில் பாதிக்கப்பட்டுள்ளன. காட்டன் கார்ப்பரேன் இந்தியா பருத்தியை கொள்முதல் செய்ய அனுமதிக்காததால் பருத்தி விலை உயர்ந்துள்ளது.

மீண்டும் காட்டன் கார்ப்பரேன் இந்தியா பருத்தியை கொள்முதல் செய்ய மத்திய அரசு அனுமதிக்க வேண்டும்.மத்திய அரசு பருத்தி, நூல் விலையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும். ஜெயலலிதா மரணம் தொடர்பான ஆறுமுகசாமி விசாரணை அறிக்கை வந்த பிறகு தான் என்ன விபரம் என தெரியவரும். ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருப்பதாக சொன்னது ஓபிஎஸ்தான். அதிமுக உட்கட்சி விவகாரத்தில் நாங்கள் தலையிட முடியாது.பி.ஜே.பி க்காக அதிமுக என்றைக்கு காவடி தூக்க ஆரம்பித்ததோ அன்றிலிருந்தே பாஜக கட்டுப்பாட்டுக்குள் அதிமுக வந்து விட்டது. அதிமுக ஒன்றாக இருந்தாலும், மூன்றாக இருந்தாலும் பாஜக கட்டுப்பாட்டுக்குள் தான் இருக்க போகிறது. ஈ.பி.எஸ், ஓ.பி.எஸ், சசிகலா என யாராக இருந்தாலும் மோடியை எதிர்க்க கூடிய நிலைமையில் இல்லை. அதிமுகவை பலவீனப்படுத்தி முழுமையாக தனது கட்டுப்பாட்டுகள் வைத்துக் கொள்ள பா.ஜ.க நினைக்கின்றது. அதிமுகவிற்குள் நடக்கும் கோஷ்டி சண்டை பாஜகவிற்கு உதவி செய்கிறது.  பா.ஜ.க கட்டுப்பாட்டில் அதிமுக உள்ளது. அதிமுகவை பலவீனம் செய்து உள்ளது” எனக் கூறினார்.