×

கருணாநிதியின் வாரிசுகள் மட்டும்தான் திமுகவின் தலைமை ஏற்கும் நிலை உள்ளது- கடம்பூர் ராஜூ

 

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில்  முன்னாள் அமைச்சர்  கடம்பூர் ராஜூ செய்தியாளர்களிடம் பேசினார்.

அப்போது பேசிய அவர், “திமுகவில் வாரிசு அரசியல் இருப்பது காலம் காலமாக உள்ள அரசியல் தான். அதிமுகவில் வாரிசு அரசியல் என்ற பேச்சுக்கே இடமில்லை. கடந்த சட்டமன்றம் நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவுடன்  கூட்டணியில் இருந்தோம். கூட்டணி என்பது வேறு எங்கள்  கொள்கைகளில் சமரசம் செய்து கொண்டதில்லை இரு மொழிக் கொள்கையில் அண்ணா கடை பிடித்த அதே வழியில் வந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவும் கடை பிடித்தார்.அதே வழியில் தான் எடப்பாடி படினிச்சாமி பயணித்து வருகிறார். இருமொழிக் கொள்கையில் வேறுபாடு இல்லை அதே போல் நீட் தேர்வும் வேண்டாம் என்பதுதான் எங்களது நிலைப்பாடு. மேலும் 7 பேர்  விடுதலைக்காக முதல் குரல் கொடுத்தது  சட்டப்பேரவையில் தீர்மானம் ஏற்றி உச்ச நீதிமன்றம் வரை சென்றது அதிமுக தான்.

1980 இல் இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்ட போது முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுடன் சேவல் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்று சட்ட மன்றத்துக்கு சென்றவர் தான்  எடப்பாடி பழனிச்சாமி. இதெல்லாம் டிடிவி தினகரனுக்கு தெரியாது. அவருக்கு அரசியல் அனுபவம் இல்லை. அந்த வயதும் இல்லை. எங்களிடம் அதிகமான பொதுக்குழு உறுப்பினர்கள் உள்ளனர். எங்களிடம் தான் இரட்டை இலை சின்ன வரும் பொறாமையில் கூறுகிறார் தினகரன். அதிமுக சிதறவில்லை, கட்டுகோப்பாக உள்ளது. கட்சி அமைப்பு ரீதியான தேர்தல் 2020-இல் ஓபிஎஸ் இருக்கும் போது அனைத்து பொறுப்புகளுக்கும் தேர்தல் நடைபெற்றது.  அதில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களை வைத்து தான் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. அந்த பொது குழுவில் தான் 98 சதவீதம் பேர் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். இன்றும் 98 சதவீத பேர் கட்டுக்கப்பாகவே அதிமுகவில் உள்ளனர்.

ஒட்டுமொத்த நிர்வாகிகள் கருத்தாக ஒற்றை தலைமை வேண்டும் என்ற கருத்து பொதுக்குழுவில் பிரதிபலிக்கப்பட்டது. அதை ஓபிஎஸ் ஏற்றுக்கொள்ளாததால் அதன் கருத்து வேறுபாடு காரணமாக ஓ.பன்னீர் செல்வத்தை நீக்கி வைத்துள்ளோமே தவிர கட்சியில் பிளவு என்பது கிடையாது.98 சதவீத நிர்வாகிகள் எங்கள் பக்கம் இருக்கும் போது அதைத்தான் தேர்தல் ஆணையம் அங்கீகரிக்கும் இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் வருகிறது. அதிலும் நல்ல தீர்ப்பு வரும் தேர்தல் கமிஷனும்  யாரிடம் மெஜாரிட்டி இருக்குது. அவர்களிடமே கொடியும் சின்னமும் இருக்கும் அது எங்களிடமே இருக்கிறது” என்றார்.