×

”இரட்டை இலை சின்னம் பச்சை குத்திருக்கேன்; என் கையை அறுத்து எடுத்துடுவாங்களா?”

 

திருச்சியில் வரும் 24ஆம் தேதி அதிமுக ஓபிஎஸ் அணி சார்பில் முப்பெரும் விழா மாநாடு நடைபெற உள்ளது. அந்த மாநாடு நடைபெறும் பொன்மலை ஜி கார்னர் மைதானத்தை ஓபிஎஸ் அணியை சேர்ந்த வைத்திலிங்கம், கு.ப.கிருஷ்ணன் உள்ளிட்டோர் பார்வையிட்டனர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த கு.ப.கிருஷ்ணன், “அ.தி.மு.க கொடியையும், சின்னத்தையும் நாங்கள் பயன்படுத்த கூடாது என எந்த நீதிமன்றமும் தடை விதிக்கவில்லை. அ.தி.மு.க வின் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி அவரே அவரை அறிவித்து கொண்டுள்ளார். காவல் துறை எங்களுக்கு மாநாடு நடத்த நல்ல பாதுகாப்பு வழங்குவார்கள். நாங்களும் அவர்களுக்கு எந்த வித தொந்தரவும் செய்ய மாட்டோம்.

அதிமுக எம்ஜிஆரால் தொடங்கப்பட்ட கட்சி. இரட்டை இலை சின்னம், கட்சி கொடியும் அவருக்கு கொண்டு வந்தது. அதிமுகவை ஆட்சிக்கு கொண்டு வர பல வகைகளில் நாங்கள் உழைத்து உள்ளோம். அந்த கட்சியில் எங்களுக்கு இல்லாத உரிமை வேறு யாருக்கும் கிடையாது. கடந்த 40 ஆண்டுகளாக என் கையில் இரட்டை இலை சின்னத்தை பச்சை குத்திருக்கேன். என் கையை அறுத்து எடுத்துடுவாங்களா? யார் என்ன புகார் கொடுத்தாலும் எங்களுக்கு கவலை இல்லை. வரும் 24 ஆம் தேதி திட்டமிட்டப்படி திருச்சியில் பிரமாண்ட மாநாடு நடைபெறும், நீதிமன்றமோ, தேர்தல் ஆணையமோ எங்களுக்கு எந்த தடையும் விதிக்கவில்லை.” எனக் கூறினார்.