24 மணிநேரமும் மின்சாரம் இலவசம் - முதல்வர் அளித்த உறுதி
இருபத்தி நான்கு மணி நேரமும் மின்சாரம் இலவசம் மற்றும் தண்ணீர் இலவசமாக வழங்குவோம் என்று வாக்குறுதி அளித்திருக்கிறார் ஆம் ஆத்மி கட்சி தலைவரும், டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் . கோவா சட்டப்பேரவை பிரச்சாரத்தில் தான் இப்படி ஒரு வாக்குறுதி அளித்திருக்கிறார்.
உத்தர பிரதேசம் , உத்தரகாண்ட் , பஞ்சாப், கோவா ஆகிய ஐந்து மாநிலங்களுக்கும் வரும் பத்தாம் தேதி அன்று சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த ஐந்து மாநிலங்களில் பஞ்சாப், கோவா ஆகிய இரண்டு மாநிலங்களில் ஆம் ஆத்மி கட்சி போட்டியிடுகிறது .
டெல்லியில் ஆட்சி நடத்திவரும் ஆம் ஆத்மி கட்சி அடுத்து கோவா, பஞ்சாபிலும் ஆட்சியை பிடித்து விடும் எண்ணத்தில் தீவிர பிரச்சாரத்தில் இறங்கியிருக்கிறது. இந்த நிலையில் கோவா சட்டப்பேரவை தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி வெற்றி பெற்று ஆட்சி அமைத்தால் 24 மணி நேரமும் மின்சாரம் இலவசம், தண்ணீர் இலவசம் என்று வாக்குறுதி அளித்திருக்கிறார். அது மட்டுமல்லாமல் அனைத்து அரசு பள்ளிகளிலும் இலவச கல்வி வழங்கப்படும் என்றும், அனைத்து கிராமங்களிலும் இலவச சுகாதார நிலையம் அமைத்து தரப்படும் என்றும் அவர் வாக்குறுதி அளித்திருக்கிறார்.