×

வடமாநிலங்களில் பாஜக ஹாட்ரிக்! 'வேண்டும் மோடி… மீண்டும் மோடி'

 

குஜராத், டெல்லி, மத்தியப் பிரதேசம், உத்தராகண்ட் மாநிலங்களில் அதிக இடங்களை பாஜக கைப்பற்றும் என கணிக்கப்பட்டுள்ளது.

குஜராத்தில் பாஜக அமோக வெற்றி பெறும்

பாஜக - 26
காங்கிரஸ் - 0
மற்றவை - 0
குஜராத்தில் பாஜக அமோக வெற்றி பெறும் எனவும், மற்ற கட்சிகள் ஒரு தொகுதியைக் கூட வெல்லாது என Times Now கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சத்தீஸ்கரில் பாஜக க்ளீன் ஸ்வீப்

INDIA TODAY செய்தி ஊடகம் வெளியிட்டுள்ள தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு படி, சத்தீஸ்கரில் உள்ள 11 தொகுதிகளில்,
பாஜக : 10 - 11 தொகுதிகள்
காங்கிரஸ் : 0 - 1 தொகுதியில் வெல்லும் என கணிக்கப்பட்டுள்ளது.

ஜார்கண்டில் பாஜகவின் கரங்கள் ஓங்குகிறது

INDIA TODAY செய்தி ஊடகம் வெளியிட்டுள்ள தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு படி, ஜார்கண்டில் உள்ள 14 தொகுதிகளில்,
பாஜக :8 - 10 தொகுதிகள் காங்கிரஸ் : 4 - 6 தொகுதிகள் வெல்லும் என கணிக்கப்பட்டுள்ளது.


ஜம்முவில் காங்.3 தொகுதிகளில் வெற்றி பெறலாம்

TIMES NOW செய்தி ஊடகம் வெளியிட்டுள்ள
தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு, ஜம்மு காஷ்மீரில் உள்ள 5 தொகுதிகளில்,
காங்கிரஸ் : 2 - 3 தொகுதிகள்
பாஜக : 2 தொகுதிகள்
JKPDP: 0 1 தொகுதிகளில் வெல்லும் என கணிக்கப்பட்டுள்ளது.

தெலங்கானாவில் பாஜக தலைமையிலான NDA கூட்டணி 7-9 இடங்களை பெறும்.ஆளும் காங்கிரஸ் கூட்டணி 7-9 இடங்களையும், சந்திரசேகர ராவின் பிஆர்எஸ் கட்சி ஒரு இடத்தில் கூட வெற்றி பெறாது என்றும் கூறப்பட்டுள்ளது. ஹைதராபாத் தொகுதியில் ஓவைசி வெற்றி பெற அதிக வாய்ப்புள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

பஞ்சாபில் ஆம் ஆத் மி கட்சி 3-6 இடங்களை கைப்பற்றும்.

13 தொகுதிகளை கொண்ட அந்த யூனியன் பிரதேசத்தில் நான்குமுனை போட்டி (ஆம் ஆத்மி, INDIA கூட்டணி, NDA, சிரோமணி அகாலி தளம்)NDIA கூட்டணி 0-3, NDA 0-2 சிரோமணி அகாலி தளம் 1-4, மற்றவை 0-2 இடங்களை பெறலாம் என்று கணிக்கப்பட்டுள்ளது.

ராஜஸ்தானில் பாஜக அமோகம்

பாஜக தலைமையிலான NDA: 18 - 23
காங்கிரஸ் தலைமையிலான I.N.D.I.A: 2 - 7
தெற்கு மாநிலங்களில் காங்கிரஸ் கூட்டணியில் ஆதிக்கம் அதிகம் இருந்தாலும் வடக்கில் பாஜகவே ஆதிக்கம் செலுத்துகிறது.