”அமர் பிரசாத் ரெட்டியின் வார் ரூம் மீடியா- அரசியல் அசிங்கங்கள்” வீடியோ வெளியிட்ட மதன்
அடுத்தடுத்து ஸ்டிங் வீடியோவை வெளியிட்டுவரும் மதன் ரவிச்சந்திரனின் அடுத்த லிஸ்ட்டில் இருப்பது அண்ணாமலையின் இடது கையாக இருக்கும் அமர்பிரசாத் ரெட்டியின் உண்மை முகம் தொடர்பானது.
அந்த வீடியோவில் பெரியார் சிலைகளை அடித்து நொறுக்க வேண்டும் என எதிர் தரப்பினர் கூறுகிறார். அதற்கு அமர் பிரசாத் ரெட்டி, “தலைவர் தான் எனக்கு என்ன செய்ய வேண்டும் என சொல்லி கொடுத்திருக்கிறாரே! என்ன செய்தால் ஹைலைட் ஆகலாம், எங்கு அலப்பறை செய்ய வேண்டும் என அண்ணாமலை சொல்லிக்கொடுத்துவிட்டார். இந்த பார்ட்டியில் என்ன செய்தால் வளரமுடியும் என்ற பாயிண்ட்டை புடித்துவிட்டேன். வாரத்தில் ஒரு நாள் மட்டும் வெளிவரவேண்டும், சம்பவம் செய்ய வேண்டும். அதன்பின் அமைதியாக இருக்க வேண்டும். தலைவர் போனை மட்டுமே எடுக்க வேண்டும். மற்றபடி கட்சியில் உள்ளவர்களின் போனை எடுக்க கூடாது. யார் இவன்? என டெல்லியே அலறும். 150 சதவீதம் மீடியோவில்தான் களமாடப்போகிறேன்” எனக் கூறுகிறார்.
அண்ணாமலை வார் ரூம் ஆட்களை விலைக்கு வாங்குவது எப்படி? அவர்களின் விலை பட்டியல் என்னென்ன? அமர்பிரசாத் ரெட்டி செய்யும் மோசடி வேலைகளும், அநாகரீக செயல்களும்... வார் ரூம் நடத்த இவர்களுக்கு எங்கிருந்து பணம் வருகிறது?” என்பதை மார்ஸ் தமிழ் யூடிபூப் சேனலில் ஒளிபரப்பப்படவிருப்பதாக மதன் ரவிச்சந்திரன் தனது டிவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளார். மதனின் அதிரடியான புரோமோக்களை பார்க்கும்போது இது பாஜகவின் அவலங்களை விளக்கும் ஒரு டிரெய்லர்தான் என்பது தெளிவாக தெரிகிறது.