×

தினகரன் புலியை சீண்டிப் பார்க்கிறார்; அவருக்கு அதிமுக பற்றி பேச தகுதி இல்லை-மாபா பாண்டியராஜன்

 

அதிமுகவிலிருந்து வெளியே சென்று தனி கட்சி தொடங்கிய டிடிவி தினகரனுக்கு அதிமுகவை பற்றி பேச எந்த தகுதியும் இல்லை என முன்னாள் அமைச்சர் மாபா பாண்டியராஜன் குற்றஞ்சாட்டியுள்ளார்.

சென்னை திருவொற்றியூரில் சர்வதேச  மழையர் பள்ளி திறப்பு விழாவை அதிமுக முன்னாள் அமைச்சர மாபா பாண்டியராஜன் துவக்கி வைத்தார். தற்பொழுது உள்ள சூழ்நிலையில் குழந்தைகள் அனைவரும் செல்போன் மோகத்தில்  மூழ்கிக் கிடப்பதை மாற்றும் வகையில் பள்ளியில் குழந்தைகளின் அறிவுத்திறனையும் செயல் திறனையும் வளர்க்கும் விதத்தில் புதிய வடிவிலான நவீன விளையாட்டு உபகரணங்கள் அமைக்கப்பட்ட பள்ளியில் தானும் விளையாடி துவங்கி வைத்தார். 

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மாபா பாண்டியராஜன் , “தேவையில்லாத நேரத்தில் புலி சீண்டுவது போல  டிடிவி தினகரன் பேசி வருகிறார், அதிமுக எடப்பாடியார் தலைமையில் எழுச்சியுடன் வீறு கொண்டு வெற்றி நடை போட்டுக் கொண்டிருக்கிறது. இது அவருக்கு நன்றாக தெரிந்தும். சில காரணங்களினால் அதிமுக பிரிந்து இருக்கிற நேரத்தில் அதிமுக பற்றி கருத்தை பதிவு செய்யும் முயற்சியில் டிடிவி செயல்பட்டு வருகிறார், 99% அதிமுகவினர் எடப்பாடியாருக்கு ஆதரவாக  இருக்கின்றனர் என்பது மக்களுக்கு தெரியும். மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உருவாக்கி  வளர்த்தக் கட்சி அதிமுக கட்சி. தற்போது அதிமுக முழுமையாக எடப்பாடியார் பின்னால் நிற்கிறது. எடப்பாடி பழனிச்சாமி தனியாக கட்சி தொடங்க வாய்ப்பு கிடையாது, அதிமுகவில் இருந்து வெளியே சென்றவர்கள் இதைப் பற்றி பேசுவதற்கு எந்த உரிமையும் கிடையாது” என தெரிவித்தார்.