அவர் வ.உ.சியின் பேத்தியே இல்லை - அமைச்சரின் தவறான செயல் : வைரலாகும் வீடியோ
மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் வ. உ. சிதம்பரனாரின் கொள்ளு பேத்திக்கு உதவி செய்ததாக சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் செய்தி வெளியிட்டிருந்த நிலையில் அவர் வ.உ.சியின் பேத்தியை இல்லை என்று வஉசி குடும்பத்தினர் பரபரப்பு வீடியோவினை வெளியிட்டு இருக்கிறார்கள்.
வஉசியின் கொள்ளுப்பேத்தி உதவியதாக சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் அறிவித்திருக்கும் நிலையில், அதில் உண்மையில்லை என்று வஉசியின் பேத்தி வீடியோ ஒன்றை வெளியிட்டு இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
அந்த 45 வயது பெண் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அங்கு அவர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அவருடன் இருந்து அவரை கவனித்துக் கொள்ள உறவினர்கள் யாரும் இல்லை . அவர் வ.உ.சியின் கொள்ளுபேத்தி என்றும், அவர் கஷ்டப்பட்டு வருவதாக செய்திகள் வெளியானது.
தமிழக அரசுக்கு அவருக்கு தேவையான உதவிகளை செய்ய வேண்டும் என்று பலரும் கோரிக்கை வைத்துள்ளனர். இந்த நிலையில் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம், அவருக்கு சிறப்பு சிகிச்சை அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார் . மேலும் மதுரை அரசு மருத்துவமனையின் முதல்வரை போனில் தொடர்பு கொண்டு தனி மருத்துவ குழுவை நியமிக்க வேண்டும். அவருக்கு முறையான சிகிச்சை அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.
இது குறித்து பேஸ்புக்கில், டுவிட்டரில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் பதிவிட்டிருந்தார்.
இந்த நிலையில் மதுரை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அந்த பெண்மணி வ.உ. சிதம்பரனாரின் பேத்தியை இல்லை என்ற தகவல் வெளியாகி இருக்கிறது. வ.உ.சியின் குடும்பத்தினரே இதை மறுத்துள்ளனர். ’’அமைச்சர் எங்கள் குடும்பத்தை சேர்ந்தவர் என தவறான ஒரு நபரை கூறுகிறார். அந்த நபர் மீது போர்ஜரி வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசு பொது வெளியில் ஒரு தகவலை பகிர்வதற்கு முன் உண்மைத்தன்மையை ஆராய்ந்து செயல்பட வேண்டும்’’என்று சொல்லி இருக்கிறார் மரகத மீனாட்சி ராஜா.