×

முதலில் மருமகள்.. அடுத்து மைத்துனர்.. பா.ஜக.வில் இணையும் முலாய் சிங் குடும்பத்தினர்.. நெருக்கடியில் சமாஜ்வாடி

 

சமாஜ்வாடியின் நிறுவனர் முலாயம் சிங்கின் மைத்துனர் பிரமோத் குப்தா நேற்று பா.ஜக.வில் இணைந்தார்.

சமாஜ்வாடி கட்சியின் நிறுவனர் முலாயம் சிங். இவரது மருமகள் அபர்ணா யாதவ் (முலாயம் சிங்கின் இளைய மகனின் மனைவி) நேற்று முன்தினம் பா.ஜ.க.வில் இணைந்தார். இது சமாஜ்வாடி கட்சிக்கு பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது. இந்நிலையில் சமாஜ்வாடி கட்சிக்கு மற்றொரு அடி விழுந்துள்ளது. முலாயம் சிங்கின் மைத்துனர் பிரமோத் குப்தா நேற்று பா.ஜ.க.வில் இணைந்தார்.

முலாயம் சிங்கின் மனைவி சாதனா குப்தாவின் சகோதரர் பிரமோத் குப்தா. சமாஜ்வாடி கட்சியின் முன்னாள் எம்.எல்.ஏ.வான பிரமோத் குப்தா நேற்று பா.ஜ.க.வில் இணைந்தார். பா.ஜ.க.வில் இணைந்த பிறகு பிரமோத் குப்தா செய்தியாளர்களிடம் பேசுகையில், அகிலேஷ் யாதவ், முலாயம் சிங் யாதவை அடைத்து வைத்துள்ளார். சமாஜ்வாடி கட்சிக்குள் முலாயம் சிங் யாதவின் நிலை மிகவும் மோசமாக உள்ளது.

குற்றவாளிகளும், சூதாட்டக்காரர்களும் சமாஜ்வாடி கட்சியில் சேர்க்கப்பட்டுள்ளனர் என்று தெரிவித்தார். சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவின் குடும்ப உறுப்பினர்களே வரிசையாக பா.ஜ.க.வில் இணைவது அந்த கட்சிக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.