×

சசிகலா தலைமையை நோக்கி அதிமுக நகர்கிறது- நாஞ்சில் சம்பத்

 

ஒன்றாக இணைந்து செயல்படுவோம் என்று எடப்பாடி பழனிச்சாமிக்கு ஓபிஎஸ் அழைப்பு விடுத்தார். ஆனால் எடப்பாடி பழனிசாமி அந்த அழைப்பை நிராகரித்துவிட்டார்.  எடப்பாடிக்கு பழனிச்சாமி மட்டுமல்லாது சசிகலா, தினகரன் என அனைவரும் ஒன்றிணைந்து அதிமுகவை வழிநடத்துவோம் என ஓபிஎஸ் தெரிவித்திருந்தார்.ஆனால்  இதற்கு எடப்பாடி பழனிச்சாமியும் அவரது ஆதரவாளர்களும் ஒப்புக்கொள்ளவில்லை.

இந்நிலையில் புதுக்கோட்டை செய்தியாளர்களிடம் பேசிய நாஞ்சில் சம்பத், “சசிகலா தலைமையை நோக்கி அதிமுக நகர்ந்து கொண்டிருக்கிறது, தமிழகத்தில் ஏக்நாத் சிண்டே உருவாக வாய்ப்பில்லை, பீகாரில் தான் தற்போது ஏக்நாத் சிண்டே உருவாகியுள்ளார். தமிழக அரசு இலவசங்கள் கொடுப்பதால் எந்த கேடும் இல்லை. கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு பத்தாயிரம் கோடி ரூபாய் வரையில் கடன்களை தள்ளுபடி செய்வது தான் இந்த நாட்டுக்கு கேடு.

தமிழறிஞர் நெல்லை கண்ணணின் மறைவு தமிழ் சமூகத்திற்கு ஈடு செய்ய முடியாத பெரும் இழப்பு. தமிழ் சார்ந்த தளங்களில் கோலாச்ச முயன்ற அளவிற்கு அவரால் அரசியல் அதிகாரங்கள் சார்ந்த தளத்தில்  காலூன்ற முடியாமல் போனது வருத்தம் தான். அவருக்கான உரிய அங்கீகாரத்தை இந்த தமிழ் சமூகம் கொடுத்துள்ளது என்பதே எனது கருத்து” என்றார்.