அப்போது உங்க மூளை முதுகுப்பக்கம் இருந்ததா? அன்புமணியை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்
ஜெய்பீம் படத்தில் வன்னியர் சமூகத்தை இழிவுபடுத்தி விட்டதாக சொல்லி அப்படத்தில் நடித்த நடிகர் சூர்யா மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிக்கை வெளியிட்டிருந்தார். இதற்கு பதில் அறிக்கை வெளியிட்டிருந்த சூர்யா, மன்னிப்பு கேட்காமல் கருத்து சுதந்திரத்தை அனுமதிக்க வேண்டும் என்று சொல்லியிருந்தார்.
மன்னிப்பு கேட்காமல் திமிர்த்தனமாக சூர்யா பேசுகிறார் என்று பாமகவினர் கொதித்தெழுந்தனர். , அதனால் சூர்யாவின் படங்கள் திரையிடப்பட்ட திரையரங்குகள் முன்பு பாமக ஆர்ப்பாட்டம் நடந்ததால், சூர்யாவின் படங்கள் நிறுத்தப்பட்டன. சூர்யாவின் படங்கள் திரையரங்குகளில் வெளியானால் அந்த திரையரங்குகள் அடித்து நொறுக்கப்படும் என்று பாமகவினர் மாவட்டந்தோறும் முழக்கமிட்டனர். சூர்யாவிற்கு எதிராக மாவட்டம் தோறும் பாமகவினர் வழக்கு தொடுத்து வந்தனர்.
இதனால் சூர்யாவுக்கும் அவரது வீட்டிற்கும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. தொடர்ந்து பதற்றமான சூழ்நிலை நீடித்து வந்த நிலையில் சூர்யா குடும்பத்துடன் துபாய் சென்றுவிட்டார். அதன் பின்னர் இந்த பிரச்சனை கொஞ்சம் ஓய்ந்து இருக்கிறது.
இந்நிலையில் தர்மபுரி மாவட்டம் மொரப்பூர் பகுதியில் நாம் தமிழர் கட்சியினர், இருபது ஆண்டுகள் சிறையில் உள்ள இஸ்லாமியர்களை விடுதலை செய்ய வேண்டும் என்றும், 30 ஆண்டுகள் சிறையில் உள்ள 7 தமிழர்களை விடுதலை செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
அந்த ஆர்ப்பாட்ட மேடையில் ஏறிய திமுகவினர் மைக்கை பிடுங்கி எறிந்து நாற்காலிகளைத் தூக்கி அடித்து ரகளையில் ஈடுபட்டனர். இதற்கு முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்திருக்கும் நிலையில் பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்திருக்கிறார். இதில் அன்புமணி ராமதாஸின் கருத்துக்கள்தான் நெட்டிசன்கள் எதிர்வினை ஆற்றி வருகிறார்கள்.
ஜெய்பீம் பட விவகாரத்தில் கருத்தை கருத்தாக எடுத்துக் கொண்டு போகாமல், இல்லை கருத்துக்கு பதில் கொடுத்து கருத்து மோதல் கொடுக்காமல் வன்முறையில் ஈடுபட்டு விட்டு இப்போது மட்டும் இப்படி சொல்லலாமா என்று அன்புமணி ராமதாசை வறுத்தெடுத்து வருகிறார்கள்.
தருமபுரி மாவட்டம் மொரப்பூரில் நாம் தமிழர் நடத்திய பொதுக்கூட்டத்தில் திமுகவினர் தாக்குதல் நடத்தியிருப்பது கண்டிக்கத்தக்கது. சகிப்புத் தன்மையும், கருத்துரிமையை மதிப்பதும் தான் ஜனநாயக அரசியலின் அடிப்படை. அதை மீறியவர்கள் யாராக இருந்தாலும் சட்டப்படி தண்டிக்கப்பட வேண்டும்!
விமர்சனங்களுக்கு வன்முறைகளால் பதிலடி தரத் தொடங்கினால் தமிழகம் அரசியல் களமாக இருக்காது. வன்முறைக்களமாக மாறிவிடும். அந்த நிலை ஏற்பட்டு விடக் கூடாது. அதைக் கருத்தில் கொண்டு இனி இத்தகைய நிகழ்வுகள் நடக்காமல் அனைவரும் தடுக்க வேண்டும் என்று நாம் தமிழர் கட்சி கூட்டத்தில் தகராறில் ஈடுபட்ட திமுகவினருக்கு அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்ததற்கு,
ஆணவ கொலையை ஆதரித்தார் நாம் தமிழர் கட்சி தலைவர், ஜெய்பீம் விவகாரத்திலும் ஆதரவாக இருந்தார். அதனால் அன்புமணி அவர்களை ஆதரிக்கிறார். எல்லாம் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள். தனிமனித தாக்குதல் அரசியல் நாகரிகம் கிடையாது.(நெப்போலியன் சி), நியாயமான இட ஒதுக்கீடு கோரிக்கைக்கு போராடும் போது, அப்பாவி பொதுமக்கள் இருந்த ரயில் மீது கல்லெறிந்து வன்முறையாக மாற்றியபோது, தங்கள் மூளை முதுகுப்பக்கம் இருந்ததா மிஸ்டர்? வன்முறை பற்றி எல்லாம் நீங்கள் பேசுவது என்பது சாத்தான் வேதம் ஓதுவது போல இருக்கிறது..மூடிக்கிட்டு வூட்லயே இருங்க(KolaveriBhai),
அரசாங்க ரயிலின் மீது கல் வீச்சு நடத்திய கட்சியின் நாகரிக அரசியல்வாதி திமுகவுக்கு அரசியல் நாகரிகம் கற்று தருகிறார்(சிவானந்தம்), சூர்யா படங்கள் தியேட்டரில் ஓடாது என்று தாங்கள் திருவாய் மலர்ந்தீர்களே ...அது வன்முறையை தூண்டும் பேச்சா ?அல்லது அகிம்சையை போதிக்கும் பேச்சா ?(farooki)
குடிசை கொளுத்தியவர்கள் இத பேசலாமா?எப்படியா கூச்சநாச்சமே இல்லாமா இப்படி கருத்த சொல்றிங்க. கருத்த சொல்றதுக்கு முன்னாடி உங்க STD எல்லாம் படிக்க மாட்டிங்காளா.? (கalabairavan) என்கிறார்கள். சூர்யாவை உதைத்தால் ஒரு லட்சம் பரிசு அறிவித்த மாவட்ட செயலாளர் கிட்ட ஏன் இதை சொல்ல வில்லை என்று கேட்கிறார்கள்.