×

ஒரு கழுதையைக்கூட டெல்லி அனுமதி இல்லாமல்  நியமிக்க முடியாது  - அண்ணாமலைக்கு காயத்ரி பதிலடி

 

 

தமிழக பாஜகவில் இருந்து  ஐடி விங்க் தலைவர் ,செயலாளர் மற்றும் நிர்வாகிகள் என்று கூண்டோடு வெளியேறி அதிமுகவில் இணைந்துள்ளனர்.  இதனால் ஆத்திரத்தின் உச்சத்திற்கு சென்ற அண்ணாமலை  எடப்பாடி பழனிச்சாமியை கடுமையாக  தாக்கி பேசி வருகிறார்.   அண்ணாமலையின் ஆதரவாளர்களும் அதிமுகவையும் எடப்பாடி பழனிச்சாமியையும் கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார்கள்.  

 உங்கள் கட்சி நிர்வாகிகளே நீங்கள் ஏன் தக்க வைத்துக் கொள்ளவில்லை? அவர்கள் ஏன் வெளியேறிச் செல்கிறார்கள்? என்று செய்தியாளர்கள் கேள்விக்கு,  நான் மேனேஜர் கிடையாது.  நான் மேனேஜராக இருப்பதற்காக  ஐபிஎஸ் பதவியை துறந்து இங்கே வரவில்லை .   பெயருக்கு பின்னால் எம்பி, எம்எல்ஏ என்று போட்டுக் கொள்ளவும் இங்கே வரவில்லை . அப்படி என்றால் சிஎம் ஆக வந்திருக்கிறேன் என்று நினைக்க வேண்டாம்.  நான் சிஎம் ஆகவும் விரும்பவில்லை . பாஜக அவை ஆட்சியில் அமர வைக்க வேண்டும் என்பதே எனது கடமை . அதற்காகவே பாடுபட்டு வருகிறேன். 

 நான் சிலர் கட்சியில் மேனேஜராக இருப்பேன் என்று நினைக்கிறார்கள்.  நான் அப்படி மேனேஜராக இருக்க விரும்பவில்லை.  நான் தலைவன்.  நான் இப்படித்தான் இருப்பேன்.  விருப்பமுள்ளவர்கள் இருக்கலாம் . விருப்பம் இல்லாதவர்கள் போய்க் கொண்டே இருக்கலாம் . அதை பற்றி எனக்கு ஒன்றும் இல்லை . என்னைப் பற்றி டெல்லியில் சென்று யார் என்ன சொன்னாலும் எனக்கு அது அதை பற்றி கவலை இல்லை.   நான் இப்படித்தான் இருப்பேன்.  ஜெயலலிதா இருக்கவில்லையா? கருணாநிதி இருக்கவில்லையா? அதேபோன்று ஆளுமையுடன் நான் இப்படித்தான் இருப்பேன் என்று அண்ணாமலை சொன்ன பதில்  பெரும் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

இதை திமுகவினர் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.  தலைவன் என்று தன்னைத்தானே சொல்லிக் கொள்வதற்கு திமுக கடுமையாக விமர்சித்து வருகின்றனர். அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ,  ’’அண்ணாமலை எப்படி தலைவரானார் என்ற விஷயத்திற்கு நான் போக விரும்பவில்லை . ஆனால் ஜெயலலிதா போன்ற தலைவர் என்று சொல்லிக் கொள்ள வேண்டாம் .  ஜெயலலிதா மாதிரி இனி ஒருவன் பிறக்கப் போவது கிடையாது . செஞ்சி கோட்டை ஏறுபவர்கள் எல்லாம் ராஜா தேசிங்கு கிடையாது.  மீசை வைத்தவர்கள் எல்லாம் கட்டபொம்மன் கிடையாது .  ஒரு கட்சியில் கூட்டணியில் ஒரு சில உணர்ச்சிகள் இருக்கும் . அந்த உணர்ச்சிகளை கட்டுப்படுத்துவது தான்  தலைவரின் பண்பு .   அதற்காக தலைவர்களே உணர்ச்சிகளை தூண்டக்கூடாது’’ என்று கூறி இருக்கிறார்.

 இந்த நிலையில் அண்ணாமலையின் மீது ஏற்பட்ட அதிருப்தியால் கட்சியில் இருந்து வெளியேறிய காயத்ரி ரகுராம்,   ‘’அண்ணாமலை நீங்கள் யாரையும் மேனேஜர் ஆகவோ அல்லது தலைவராகவோ ஆக்கத் தேவையில்லை.  அனைவரும் சுயமாக உருவாக்கப்பட்டவர்கள். உனக்கு ஜல்ட்ரா அடிக்க யாரேனும் தலைவராக உருவாக்க தேவை இல்லை. முதலில் சென்று சாவடி வேலை, களப்பணி, தமிழகத்தின் அடிமட்டத்தை அடையுங்கள். டெல்லி அனுமதியோ ஆர்எஸ்எஸ் அனுமதியோ இல்லாமல் கழுதையை கூட நியமிக்க முடியாது. டெல்லி ஆதரவு இல்லாமல் கூட்டணி பேசவோ முடியாது என்பதை முதலில் தெரிந்து கொள்ளுங்கள். டெல்லி உங்களைப் பார்த்து பயப்படுவது போல் பேசுவது, தமிழ் செய்தி சேனல்களில் நீங்கள் டெல்லி பார்த்து பயப்படாமல் தமிழில் பின்னால் பேசுவது போல், ஆங்கிலத்திலோ இந்தியிலோ தேசிய செய்தி சேனல்களில் நீங்கள் அதே விஷயம் பேசுவதற்கு தைரியம் இருக்கிறதா?’’என்று கேட்டிருக்கிறார்.

மேலும்,  ‘’ 20-30 வருடங்களாக கட்சியில் பணியாற்றியவர்களை உங்கள் சேறு என்று கருத்து சொல்வது முட்டாள்தனமான விஷயம். மோடி ஜி மற்றும் அமித்ஷா ஜி மற்றும் பி.எல்.சந்தோஷ் ஜி 30 ஆண்டுகளாக சேவை செய்து வருகிறார்கள்.   அவர்களை ஒரு சேறு என்று அழைக்க உங்களுக்கு தைரியம் இருக்கிறதா? தமிழ்நாடு, தேசம் மற்றும் பாஜக கட்சிக்கு நீங்கள் ஒரு பெரிய நகைச்சுவை’’என்று கடுமையாக விமர்சித்துள்ளார்.