×

ஒற்றைத் தலைமை என்ற பெரிய பதவியை அடைய அதிமுகவினரை தூண்டிவிட்டு நாடகம்! ஈபிஎஸ் மீது குற்றச்சாட்டு

 

ஒற்றைத் தலைமை என்ற பெரிய பதவியை அடைவதற்கு பேராசை கொண்டு அதிமுகவினரை தூண்டிவிட்டு பேச வைத்து, தானும் தன்னை சார்ந்தவர்கள் மட்டுமே பதவி வகிக்க வேண்டும் என்று குறுகிய எண்ணத்தில் தேர்தலை சந்தித்தவர் தான் எடப்பாடி பழனிசாமி என்று புதுச்சேரி அதிமுக முன்னாள் எம்எல்ஏ ஓம் சக்தி சேகர் குற்றசாட்டியுள்ளார்.

புதுச்சேரியில் செய்தியாளர்களை சந்தித்து அதிமுக முன்னாள் எம்எல்ஏ ஓம்சக்தி சேகர், “மக்கள் நலத்திட்டங்களை நிறைவேற்றும் மாநில வளர்ச்சி பெரும் என்பதற்காக தான் தேசிய ஜனநாயக கூட்டணியில் அதிமுக கூட்டணி வைத்தது. அதிமுகவில் ஓபிஎஸ் போன்ற ஒரு தொண்டனை இதுவரை யாரும் பார்த்ததில்லை. அவரை பற்றி தர குறைவாக பேசுவதை தாம் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டோம். ஆனால் புதுச்சேரியில் தகுதி நீக்கம், பதவி நீக்கம் செய்யப்பட்டவர்கள் தன்னைத்தானே பதவிக்கொடுத்து பறை சாற்றிக்கொண்டு கழகத் தொண்டர்களை விமர்சிப்பதை நிறுத்திக் கொள்ள வேண்டும்.

ஒற்றைத் தலைமை என்ற பெரிய பதவியை அடைவதற்கு பேராசை கொண்டு அதிமுகவினரை தூண்டிவிட்டு பேச வைத்து, தானும் தன்னை சார்ந்தவர்கள் மட்டுமே பதவி வகிக்க வேண்டும் என்று குறுகிய எண்ணத்தில் தேர்தலை சந்தித்தவர் தான் எடப்பாடி பழனிசாமி . ஆட்சியில் இருக்கும் போது நாராயணசாமிக்கு ஆதரவாகவும் ஆட்சியில் இல்லாத போது ரங்கசாமிக்கு எதிராகவும் கருத்து தெரிவித்து வந்த அன்பழகன் தற்போது ஆட்சியில் இருப்பதால் ரங்கசாமிக்கு ஆதரவாக கருத்து தெரிவித்து என்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் Bடீமாக அன்பழகன் செயல்படுகிறார்..


கடந்த இரண்டு ஆண்டுகளில் அன்பழகன் செய்த தவறை மறைக்கவே, துணைநிலை ஆளுநர் துதிப்படுகிறார். இனிமேலாவது நல்ல அரசியல்வாதியாகவும் மக்கள் சேவகனாகவும் செயல்பட வேண்டும்” எனக் கூறினார்.