×

#BREAKING ஈபிஎஸ் ஆட்சியை காப்பாற்றவே இரட்டைத் தலைமையை ஏற்றுகொண்டேன்- ஓபிஎஸ்

 

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய ஓபன்னீசெல்வம், “பொதுச் செயலாளரை அதிமுகவின் அடிப்படை உறுப்பினர்கள் மூலம் மட்டுமே தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். இதை எந்த சூழ்நிலையில் மாற்றக்கூடாது என்பது அதிமுகவின் சட்டவிதி.

தேர்தல் மூலமாகவே தொண்டர்கள் வாக்களித்து பொதுச்செயலாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இதன் அடிப்படையில்தான் எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோர் பதவியில் தொடர்ந்தனர். பொதுச்செயலாளரை தேர்தல் முறையில்தான் தேர்வு செய்யமுடியும், தலைவரை தொண்டர்கள்தான் தேர்ந்தெடுக்க வேண்டும்.தானும் ஈபிஎஸும் இணையும்போது ஜெயலலிதாவுக்கு மட்டுமே பொதுச்செயலாளர் பதவி என முடிவு செய்தோம்

மாவட்ட கழகச்செயலாளர்கள், கட்சி நிர்வாகிகளோ தலைமையை தேர்ந்தெடுக்க வேண்டும. இரட்டைத் தலைமை நிலை இதனால் தான் உருவாக்கப்பட்டது. பொதுச்செயலாளர் பொறுப்பே இருக்கலாமே, அமைச்சர் பதவி வேண்டாம் என்றும் நான் அப்போது சொன்னேன். நம்பிக்கையில்லா தீர்மானத்தால் ஆட்சி பறிபோகக்கூடாது என்ற நல்ல எண்ணத்தின் அடிப்படையில் எடப்பாடி பழனிசாமி அரசை காப்பாற்றினோம். இரட்டைத் தலைமை என்ற யோசனையை எடப்பாடி பழனிசாமி சொன்னபோது நான் ஏற்றுக்கொண்டேன், நான் ஏற்றுக்கொண்ட துணை முதலமைச்சர் பதவிக்கு எந்த பிரத்யேக அதிகாரமும் இல்லை.இருப்பினும் பிரதமர் வேண்டுகோளுக்கு இணங்க அதனை ஏற்றுகொண்டேன்.

அதிமுக அரசு கலைந்துவிடக்கூடாது என்ற அடிப்படையில்தான் எடப்பாடி பழனிசாமி உடன் இணைந்தேன். இருவரும் இணைய வேண்டும் என்று அதிமுக தொண்டர்கள் அன்று விரும்பினர். அதற்கு மதிப்பளித்து நான் இணைந்தேன்.பிரதமர் என்னை  துணை முதல்வர் பதவியை ஏற்றுக்கொள்ள அழுத்தம் கொடுத்தார். மாவட்ட செயலாளர் கூட்டத்தில் முதன்முதலில் ஒற்றை தலைமை வேண்டும் என்று மாதவரம் மூர்த்தி  கூறினார்.இது குறித்து வெளியில் யாரும் பேசக்கூடாது என்று கூறியும் ஜெயக்குமார் பேட்டி அளித்தார்.” எனக் கூறினார்.