எடப்பாடி பழனிசாமி ஒரு நம்பிக்கை துரோகி- ஓபிஎஸ்
அதிமுகவில் உள்ள நய வஞ்சகர்களை ஓட ஓட விரட்டக் கூடிய காலம் வெகுதூரத்தில் இல்லை என ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
திருச்சியில் நடைபெற்றுவரும் மாபெரும் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றிய ஓ.பன்னீர்செல்வம், “ஜெயலலிதா நிரந்தரப் பொதுச்செயலாளர் என்ற விதியை நீக்கிய எடப்பாடி பழனிசாமி ஒரு கபட வேடதாரி. என்னை முதல்வராக்கியது சசிகலா, அவர் திரும்பக் கேட்டதால் கொடுத்துவிட்டு வந்தேன். எடப்பாடி பழனிசாமிக்கு யார் பதவி கொடுத்தது? எடப்பாடி பழனிசாமி ஒரு நம்பிக்கை துரோகி அவரை வரலாறு மன்னிக்காது. எம்ஜிஆர் போன்று கருப்புக் கண்ணாடி, தொப்பி அணிந்து போஸ் கொடுத்த எடப்பாடி பழனிசாமி எம்.ஜி.ஆரின் கால் தூசுக்கு பெறமாட்டார். கோடிக்கணக்கான பணத்தை வைத்து மாவட்டச் செயலாளர்களையும், தலைமைக் கழக நிர்வாகிகளையும் விலக்கு வாங்கியுள்ளார்.
எம்ஜிஆர், ஜெயலலிதாவுக்கு எடப்பாடி பழனிசாமி மாபெரும் துரோகம் செய்துள்ளார். போலி பொதுக்குழுவை கூட்டி 2 ஆயிரம் கேடிகளையும், ரவுடிகளையும் உட்கார வைத்து அராஜகம் கட்டவிழ்த்துவிடப்பட்டது. பணத்திமிரை அடக்கி, ஒடுக்கி அதிமுகவை மீண்டும் ஜனநாயகப் பாதையில் நிறுத்தும் சக்தியாக தொண்டர்கள் உள்ளனர். அதிமுகவில் உள்ள நய வஞ்சகர்களை ஓட ஓட விரட்டக் கூடிய காலம் வெகுதூரத்தில் இல்லை” என பேசினார்.