×

எங்கள் முதல்வர் எங்கள் பெருமை - மு.க.ஸ்டாலின் புகைப்பட கண்காட்சி
 

 

 சென்னை ராஜா அண்ணாமலை மன்றத்தில் ‘எங்கள் முதல்வர் எங்கள் பெருமை’ என்கிற தலைப்பில் புகைப்பட கண்காட்சி நடைபெறுகிறது . முதல்வர் மு. க. ஸ்டாலின்  பிறந்தநாள் நாளை முன்னிட்டு இந்த கண்காட்சி  நடைபெறுகிறது.   

இந்த புகைப்பட கண்காட்சியை மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் இன்று தொடங்கி வைத்தார்.   தொடங்கி வைத்து அவர் கண்காட்சியை பார்வையிட்டார்.  

 இந்த புகைப்பட கண்காட்சியில் மறைந்த முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான கருணாநிதியுடன்  முதல்வர் ஸ்டாலின் புகைப்படங்கள்,  முதல்வர் ஸ்டாலினின் இளமை பருவத்தில் இருந்து தற்போது வரை உள்ள காலகட்டங்களை பதிவு செய்திருக்கிறது இந்த கண்காட்சியில் இடம்பெற்றுள்ள புகைப்படங்கள்.  குறிப்பாக மிசா காலத்தில் அவர் சிறையில்  அனுபவித்த சித்திரவதைகள் குறித்தும் இந்த கண்காட்சியில் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

 இது குறித்து இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி. கே. சேகர் பாபு,  நாளை மார்ச் 1  முதல்வர் தலைவர்  பிறந்தநாள் - மக்கள் முதல்வரின் மனிதநேய திருநாள்.
 சென்னை ராஜா அண்ணாமலை மன்றத்தில் 'எங்கள் முதல்வர் எங்கள் பெருமை' என்ற தலைப்பில் நடக்கும் புகைப்படக் கண்காட்சியை ம.நீ.ம. தலைவர் 
கமல்ஹாசன் அவர்கள் பங்கேற்று தொடங்கி வைத்து, புகைப்பட கண்காட்சியை பார்வையிட்டார். இந்நிகழ்வில் தயாநிதிமாறன் எம்.பி, திரைப்பட நடிகர் மற்றும் கவிஞர் ஜோ மல்லூரி, சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் கழக நிர்வாகிகள் உடனிருந்தனர்  என்று குறிப்பிட்டிருக்கிறார்.