×

மத்திய பல்கலைக்கழகங்களில் 10 ஆயிரம் ஆசிரியர் பணியிடங்கள் காலி.. மோடி அரசின் பரிசு..  ப.சிதம்பரம் நக்கல்

 

மத்திய பல்கலைக்கழகங்கள் உள்ளிட்ட உயர் கல்வி நிறுவனங்களில் 10 ஆயிரம் ஆசிரியர் பணியிடங்கள் காலியாக இருப்பதை சுட்டிக்காட்டி, இது மோடி அரசின் ஆண்டு இறுதி பரிசு என்று ப.சிதம்பரம் கிண்டல் செய்துள்ளார்.

மத்திய பல்கலைக்கழகங்கள், ஐ.ஐ.டி. மற்றும் ஐ.ஐ.எம்.களில் ஆசிரியர் பணியிடங்கள் ஆயிரக்கணக்கில் காலியாக உள்ளன. இந்த பணியிடங்கள் நிரப்புவதற்கான நடவடிக்கைகளை அரசு மந்த கதியில் எடுத்து வருவதாக தகவல். இந்த சூழ்நிலையில் உயர் கல்வி நிறுவனங்களில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை குறிப்பிட்டு இது மோடி அரசின் ஆண்டு இறுதி பரிசு என்று ப.சிதம்பரம் கிண்டல் செய்துள்ளார்.

மாநிலங்களவை உறுப்பினரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் தனது டிவிட்டர் பக்கத்தில் தொடர்ச்சியான டிவிட்டுகளில், மோடி அரசின் மற்றொரு ஆண்டு இறுதி பரிசு: மத்திய பல்கலைக்கழகங்கள், ஐ.ஐ.டி.க்கள் மற்றும் ஐ.ஐ.எம்.களில் 10 ஆயிரம் ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இதில் 4,126 எஸ்.சி. மற்றும் ஓ.பி.சி.க்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

ஆசிரியர்கள் மூலம் கற்பிப்பதே அவர்களின் முதன்மை நோக்கம் என்று நாங்கள் நினைத்தோம். போதிய  ஆசிரியர்கள் இந்த நிறுவனங்கள் என்ன செய்கின்றன என்று எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது என்று பதிவு செய்துள்ளார்.