×

பாஜக கூட்டணி முகாமில் இருந்து ஈ.பி.எஸ்.-க்கு வந்த வாழ்த்து செய்தி

 

அதிமுகவின் 53வது ஆண்டு விழாவை ஒட்டி ஈ.பி.எஸ்., ஓ.பி.எஸ்.க்கு ஆந்திர துணை முதலமைச்சர் பவன் கல்யாண் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

எம்ஜிஆரால் தோற்றுவிக்கப்பட்ட அதிமுக, வரும் அக்.17-ம் தேதி53-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. இதை கொண்டாடும் வகையில் இன்று காலை 10.30மணிக்கு சென்னை, ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் எம்ஜிஆர், ஜெயலலிதா சிலைகளுக்கு கட்சியின் பொதுச் செயலாளர் பழனிசாமி மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தி, கட்சி கொடியை ஏற்றி வைத்தார். 

இந்நிலையில் அதிமுகவின் 53வது ஆண்டு விழாவை ஒட்டி ஈ.பி.எஸ்., ஓ.பி.எஸ்.க்கு ஆந்திர துணை முதலமைச்சர் பவன் கல்யாண் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக பவன் கல்யாண் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஈ.பி.எஸ்.-ன் ஆற்றல் மிக்க, சிறந்த தலைமையின் கீழ், எம்.ஜி.ஆரின்  கொள்கைகளை அதிமுக தொடர்ந்து காப்பாற்றி வருகிறது. அதிமுக அரசின் முதலமைச்சராக சிறப்பாக செயலாற்றிய ஓ.பி.எஸ். அவர்களுக்கும் இந்த நன்நாளில் மனமார்ந்த வாழ்த்துகள்” எனக் குறிப்பிட்டுள்ளார். 

அதிமுக பொது செயலாளர் ஈபிஎஸ்-க்கு வாழ்த்து தெரிவித்துள்ள பவன் கல்யாண், அதே பதிவில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பி.எஸ்-க்கும் வாழ்த்து கூறியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. முன்னாள் முதல்வர் ஓ.பி.எஸ். இடம் பெற்றுள்ள தேசிய ஜனநாயக கூட்டணியில் பவன் கல்யாணின் ஜன சேனா கட்சியும் இடம் பெற்றுள்ளது குறிப்பிடதக்கது.