×

தெறிச்சு ஓடுவான்... சீமான் மீது பிரசாந்த் கிஷோர் ஆவேசம்

 

சீமான் மீது ஏன் இன்னும் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கேள்வி எழுப்பி இருக்கிறார் பிரபல தேர்தல வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர். 

 புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் விவகாரம் பெரும் பிரச்சனையாக போய்க்கொண்டிருக்கிறது.   வடமாநில தொழிலாளர்கள் தமிழகத்தில் அதிகம் குவிந்து வருகிறார்கள்.  இப்படியே போனால் இன்னும் அவர்களுக்கு வாக்குரிமையும் முழுவதுமாக கிடைத்துவிட்டால் தமிழனை அடித்து துரத்தி விடுவார்கள்.  நாம் அவர்களுக்கு அடிமையாக இருக்க வேண்டியது வரும்.   பாஜக வாக்குரிமைக்காக வடமாநில தொழிலாளர்களை அதிகம் ஊக்குவித்து இங்கே தமிழகத்திற்கு கொண்டு வருகிறது. இதனால் திமுக அதிமுகவுக்கும் பாதிப்பு என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தொடர்ந்து எச்சரித்து வருகிறார்.

 இந்த நிலையில் வட மாநிலத் தொழிலாளர்கள் தமிழகத்தில் தொடர்ந்து தாக்கப்படுவதாக வதந்தி பரவியதால் பெரும் பதற்றம் ஏற்பட்டது . முதல்வர் ஸ்டாலின் தலையிட்டு அது உண்மை இல்லை வடமாநில தொழிலாளர்களுக்கு தமிழக அரசு பாதுகாப்பு வழங்கும் என்று உறுதி கூறி இருக்கிறார்.   இதை அடுத்து போய் செய்தி பரப்பியவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த சூழலில் இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் வட மாநில தொழிலாளர்கள் குறித்து சீமான் பேசிய வீடியோ ஒன்றை தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு , தமிழகத்தில் இந்தி பேசுபவர்களுக்கு எதிராக வெளிப்படையாகவே வன்முறை தூண்டப்படுகிறது . போலியான வீடியோக்கள் மூலம் வெறுப்பையும் வன்முறையையும் தூண்டியவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.  ஆனால் தமிழ்நாட்டில் இந்தி பேசும் மக்களுக்கு எதிராக வெளிப்படையாகவே வன்முறை தூண்டுபவர்களையும் விட்டுவிடக்கூடாது.  சீமான் போன்றவர்கள் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கேள்வியை எழுப்பி இருக்கிறார் பிரசாந்த் கிஷோர்.

 அந்த வீடியோவில்,   ‘’நான் அதிகாரத்திற்கு வந்தால் தெறிச்சு ஓடுவான்.  இந்திக்கார பசங்க எல்லாம் அவனே பெட்டிய கட்டிக்கிட்டு ஓடுவான்.  எத்தனை பேரை வச்சு வெளுப்பேன் என்று தெரியாது. கஞ்சா  வச்சிருந்தான் உள்ளே போடு, அபின் வச்சிருந்தான் உள்ளே போடு, பெண்ணை கையை பிடிச்சு இழுத்தான் உள்ளே போடு என்று ஆயிரம் பேரை தூக்கி உள்ள போட்டு , சோறு போடாம அடிச்சு பிச்சி விட்டா. கையெடுத்து கும்பிட்டு அத்தனைபேரும் ஓடிடுவான்.  ஒரே வாரத்துல ஓடிடுவான். ’’ என்று பேசி இருக்கிறார் சீமான்.

சீமான் பேசியதை இந்தியில் மொழிபெயர்ப்பு செய்து தனது டுவிட்டர் பக்கத்தில் பிரசாந்த் கிஷோர் பகிர்ந்து இருக்கிறார்.  இந்த விவகாரத்தை பிரசாந்து கிஷோர் தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்து இருப்பதால் இந்த விவகாரம் தேசிய அரசியலில் பெரும் கவனத்தை ஈர்த்து இருக்கிறது.