×

கட்சிகளின் சொத்துக்கணக்கு - 3வது இடத்தில் அதிமுக

 

தேசிய மற்றும் மாநில கட்சிகளின் சொத்து மதிப்பு வெளியாகி இருக்கின்றன.  இதில் தேசிய கட்சிகளில் பாஜக முதலிடத்திலும், மாநில கட்சிகளில் சமாஜ்வாடி கட்சியும்  முதலிடம் வகிக்கின்றன.

 2019 -2020 நிதியாண்டில் தேசிய கட்சிகளும் மாநில கட்சிகளும் தங்களின் சொத்து விவரங்களை சமர்ப்பிக்கின்றன.  இவற்றை ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம் என்கிற அமைப்பு வெளியிட்டிருக்கிறது.   அதன்படி 2019- 2020 நிதியாண்டில் பாஜகவுக்கு 4,874 கோடி ரூபாய் சொத்து இருப்பதாக கணக்கினை சமர்ப்பித்திருக்கிறது.    தேசிய கட்சிகளின் சொத்துக்களில் பாஜக தான் முதலிடம் வகிக்கிறது.    இதற்கு அடுத்தபடியாக பகுஜன் சமாஜ் கட்சி இருக்கிறது.

 698 கோடி ரூபாய் சொத்துக்களுடன் பகுஜன் சமாஜ் வாடி கட்சி இரண்டாவது இடத்தில் இருக்கிறது.   588 கோடி ரூபாய் சொத்துக்களுடன் காங்கிரஸ் மூன்றாவது இடம் வகிக்கிறது.    அடுத்ததாக 569 கோடி ரூபாயுடன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும்,  247 கோடி ரூபாயுடன் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியும் , 29 கோடி ரூபாயுடன் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும்,  8 கோடி ரூபாயுடன்  தேசியவாத காங்கிரஸ் கட்சியும்  அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.

 எல்லாக் கட்சிகளுமே வைப்புநிதியில் தான் அதிக சொத்துக்களை வைத்திருக்கின்றன.   பாஜகவுக்கு மட்டும் வைப்பு நிதியாக 3 ஆயிரத்து 253 கோடி ரூபாய் இருக்கிறது. இதேபோல மாநில கட்சிகளில் சமாஜ்வாடி கட்சி 563 கோடியே 47 லட்சம் சொத்துக்களுடன் முதலிடம் வகிக்கிறது.   முன்னூத்தி ஒரு கோடியே 41 லட்சத்து டன் தெலுங்கானா ராஷ்டிர சமிதி இரண்டாம் இடம் வகிக்கிறது .   267 கோடியே 61 லட்சத்து டன் அதிமுக மூன்றாம் இடம் வகிக்கிறது.  

தேசிய கட்சிகள் போலவே  மாநில கட்சிகளும் வைப்புநிதியில் தான் அதிக சொத்துக்களை வைத்திருக்கின்றன.    சமாஜ்வாடி கட்சி 434 கோடியே 21 லட்சம் ரூபாயினை வைப்புநிதியில் வைத்துள்ளன.    அதிமுக 246 கோடியே 90 லட்சம் ரூபாய் வைப்புநிதி வைத்திருக்கின்றது.   அதேபோல் 162 கோடி 42 லட்சம் ரூபாய் திமுக வைப்பு நிதியாக வைத்திருக்கின்றன.

 நிலையான சொத்துக்கள் மற்றும் கடன், முன்தொகை. வைப்பு நிதி,  மூலத்தில் வரி பிடித்தம்,  மூலதனம், இதர சொத்துக்கள் என்கிற ஆறு இனங்களில் இந்த சொத்துக்கள் வகைப்படுத்தப்பட்டு இருக்கின்றன.