×

சசிகலா முடிந்துபோன அத்தியம்- அன்பழகன்

 

அதிமுகவில் ஒற்றை தலைமை பிரச்சனை தற்போது விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில் தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் உள்ள அதிமுக அலுவலகங்களில் ஓபிஎஸ்-ன் புகைப்படம் கிழிக்கப்பட்டு அகற்றப்பட்டும் வருகின்றன. 

அதே வேளையில் ஓபிஎஸ்-ன் ஆதரவாளர்கள் எடப்பாடி பழனிச்சாமியின் புகைப்படத்தை கிழித்தும், உருவ பொம்மை கொளுத்தியும் தங்களது எதிர்ப்பை தீவிரமாக தெரிவித்து வருகின்றனர். இதனிடையே ஜூலை 11ம் தேதி பொதுக்குழு நடைபெறும் என அறிவித்துள்ள எடப்பாடி பழனிசாமி தரப்பு , அதற்கான முன்னேற்பாடுகளை தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக, அனைத்து பொதுக்குழு உறுப்பினர்களுக்கும்
தலைமைக் கழகம் அழைப்பு என்ற பெயரில் பொதுக்குழு கூட்டத்திற்கான அழைப்பிதழ் அனுப்பபட்டு வருகிறது. ஆனால் எடப்பாடி தரப்பு அழைப்பிதழ் அனுப்பி அனைத்து ஏற்பாடுகள் செயாதாலும் 11ம் தேதி அதிமுக பொதுக்குழு நடக்க வாய்ப்பே இல்லை என ஓபிஎஸ் ஆதரவாளர்கள் தெரிவித்துவருகின்றனர்.

இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த புதுச்சேரி மாநில அதிமுக செயலாளர் அன்பழகன், “கண்டிப்பாக நடைபெற உள்ள அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்படுவார்.அதிமுகவுக்கு ஓ.பன்னீர்செல்வம் துரோகம் செய்துவிட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை, ஓ.பி.எஸ். அவர்களின் மகன்,  சந்தித்து பாராட்டியது  கோடிக்கணக்கான அதிமுக தொண்டர்களின் இதயத்தில் ஈட்டி வைத்து  குத்தியது போல் உள்ளது. சசிகலா முடிந்துபோன அத்தியம். அதிமுக தொண்டர்கள் யாருக்கும் விலை போகமாட்டார்கள்” எனக் கூறினார்.

...