×

டிடிவி தினகரன் கட்சியை கலைத்து விட்டு அதிமுகவில் இணைந்தால் வரவேற்போம்- புகழேந்தி

 

டிடிவி தினகரன் கட்சியை கலைத்து விட்டு வந்து அதிமுகவில் இணைந்தால் வரவேற்போம் என அதிமுக கழக ஒருங்கிணைப்பு குழுவை சேர்ந்த வா.புகழேந்தி பேட்டியளித்துள்ளார்.


அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக ஒருங்கிணைப்பு குழு சார்பில் சென்னை லேடி வில்லிங்டன் கல்லூரி வளாகத்தில் அமைந்துள்ள முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அவர்கள் சிலைக்கு மாலைக் அணிவிக்கப்பட்டது. தொடர்ந்து  ஒருங்கிணைப்பு குழுவை சேர்ந்த வா.புகழேந்தி மற்றும் கே.சி.பழனிசாமி  செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய புகழேந்தி, “தமிழகம் முழுவதிலும் இருந்தும் வெளிநாட்டில் இருந்தும் நல்ல ஒரு முயற்சி எடுத்து இருக்கிறீர்கள் என்று எங்களுக்கு அலைபேசியில் அழைத்து வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். உள்ளாட்சித் தேர்தலில் 90% திராவிட முன்னேற்ற கழகம் எல்லாவற்றிலும் வெற்றி பெற்றுள்ளது.  10% தான் எங்களால் வெற்றி பெற முடிந்தது. பேரூராட்சி ஜீரோ, நகராட்சி ஜீரோ, மாநகராட்சி ஜீரோ யாரையும் குறை கூற விரும்பவில்லை. இறங்கி வந்தால் தான் வெற்றி பெற முடியும் எல்லோரும் இணைந்தால் தான் வெற்றி பெற முடியும் அந்த சூழ்நிலையில் உள்ளது.

வெளியே சொல்ல முடியாத ஒரு முயற்சிகள் மேற்கொண்டு வருகிறோம். நாங்கள் எடுத்து இருக்கின்ற ஒரு நிலைப்பாடு ஒரு மாபெரும் வெற்றியை பெறுவோம் என்பதிலே எங்களுக்கு மாற்று கருத்து இல்லை. அதனால் தான் அம்மா சிலை முன்பு ஒரு இனிப்பை கொடுத்து ஒரு சபதமாக ஏற்று இருக்கிறோம். இன்று திருவண்ணாமலை விழுப்புரம் மாவட்டத்தில் இருந்தும் தொண்டர்கள் வந்திருக்கிறார்கள் அனைவரும் ஒத்துழைக்க வேண்டும். ஈபிஎஸ், சசிகலா எல்லோரும் ஒத்துழைத்து ஒருங்கிணைந்து போக வேண்டும். ஓபிஎஸ் அவர்கள் தயாராக இருக்கிறார். ஒத்துழைத்தால் முடிந்துவிடும். ஒரு நாள் வேலை தான் என்றாலும், அது முடியாது மீண்டும் அதிமுக தொண்டர்கள் நலன்படி உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற வேண்டும். இந்த குழு அனைத்து இடங்களிலும் நிர்வாகிகளை போட்டு கண்காணிக்கும்.

டிடிவி தினகரன் கட்சியை விட்டு விட்டு அதிமுக வரவேண்டும் என்றால் வரட்டும். எங்களை பொறுத்தவரை பழனிச்சாமி ஐந்து நிமிடத்தில் முடிவு எடுத்தால் அதிமுகவுக்கு விடிவு காலம் பிறக்கும். இதற்கு பழனிசாமி ஒத்துகொள்ள வேண்டும். இல்லை என்றால் ஒரு தேசிய கட்சி உள்ளே வந்துவிடும். திராவிட சிந்தாத்தம் கொண்ட திராவிட கட்சிகள் தான் தமிழகத்தை தொடர்ந்து ஆள வேண்டும் என்ற ஒரு கொள்ளையோடு இந்த முடிவை எடுத்து இருக்கிறோம்” என தெரிவித்தார்.