×

சீக்கிரம் பழனிசாமியை சிறையில் அடையுங்கள்- புகழேந்தி

 

அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கு மீது  நாளை உச்சநீதிமன்றத்தில் எங்களுக்கு ஆதரவான தீர்ப்பு வழங்கப்படும் என்ற நம்பிக்கை இருக்கிறது என ஓபிஎஸ் ஆதரவாளர் புகழேந்தி தெரிவித்துள்ளார். 

தேனி மாவட்டம் பெரியகுளத்தில் ஓ.பி.எஸ் பண்ணை வீட்டில், அவருடன் ஆலோசனை நடத்திய புகழேந்தி, “எடப்பாடி முதலமைச்சராக இருந்தபோது புதிதாக கட்டப்பட்ட 11  மருத்துவக்கல்லூரியில் மிகப்பெரிய ஊழல் நடைபெற்றதற்கான முகாந்திரம் இருப்பதாக தெரிவித்த தற்போதைய திமுக அரசு வழக்கு பதிவு செய்வதற்கு ஏன் தாமதிக்கிறது. விரைவில் எடப்பாடி பழனிச்சாமி மீது வழக்குப் பதிந்து அவரை சிறையில் அடைக்க வேண்டும் என்று ஒட்டு மொத்த தமிழக மக்கள் எதிர்பார்க்கின்றனர். அதிமுகவை எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா மீட்டெடுத்ததை போன்று தற்பொழுது உள்ள சூழ்நிலையில் ஓ. பன்னீர்செல்வம் தலைமையில் அதிமுக மீட்டெடுக்கப்படும்” எனக் கூறினார்.

ஓபிஎஸ் உள்ளிட்டோர் மன்னிப்பு கடிதம் வழங்கி விட்டு கட்சியில் இணைந்து கொள்ளலாம் எனக் கூறிய ராஜன் செல்லப்பாவிற்கு பதிலளித்த புகழேந்தி,  விரைவில் சிறைக்கு செல்ல இருப்பவர்களிடம் எல்லாம் மன்னிப்பு கேட்க முடியாது என்று தெரிவித்தார்.