"ரூ.4,800 கோடி ஊழல் முறைகேடு செய்துவிட்டு திமுக ஆட்சி மீது ஈபிஎஸ் பழிபோடுகிறார்"
4800 கோடி ரூபாய் ஊழல் முறைகேடு செய்துவிட்டு ஓராண்டு திமுக ஆட்சியில் ஊழல் நடந்து விட்டதாக எடப்பாடி பழனிச்சாமி பேசுகிறார் திமுக ஆட்சியின் ஊழலை ஆதாரத்துடன் புகார் அளிப்பாரா? என புகழேந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.
கிருஷ்ணகிரியில் முன்னாள் அதிமுக செய்தி தொடர்பாளரும் ஓபிஎஸ் ஆதரவாளருமான பெங்களூர் புகழேந்தி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “ எனது மாஜ் நண்பர் எடப்பாடி பழனிச்சாமி கிருஷ்ணகிரி வந்து சென்றுள்ளார். அரசியல் களம் சூடு பிடித்து எடப்பாடி பழனிச்சாமி அலைகிறார். ஓபிஎஸ் மாவட்ட செயலாளர்களை நியமித்து வருகிறார். அதற்குள் வழக்கு வந்துவிட்டது. பொதுக்குழுவை கூட்ட நாங்கள் அனுமதி வழங்கவில்லை என நீதிமன்றம் தெரிவித்துள்ளது. ஓபிஎஸ் இன்னும் களத்துக்கு வரவில்லை ஆனால் இபிஎஸ் அலைந்து வருகிறார். துரோகி பதவி வெறி என இபிஎஸ் கூறுகிறார். ஒரே பதவி வெறிக்கு தான் இவ்வளவு பெரிய அரசியல் சதுரங்கமாக மாரி தமிழகம் முழுவதும் பார்க்கின்ற நிலை உருவாகி உள்ளது. ஜெயலலிதா நிரந்தர பொதுச் செயலாளர் என தெரிவித்துவிட்டு அவரை அவமானப்படுத்தி விட்டு இடைக்கால பொதுச் செயலாளர் என பேசுவதன் மூலம் யாருக்கு பதவி வெறி என இபிஎஸ்யை கேள்வி எழுப்பினார். மக்கள் பேச ஆரம்பித்து விட்டார்கள் ஓபிஎஸ் அலை வீசுகிறது அதனால் தான் இபிஎஸ் இப்படி சுற்றி வருகிறார்.
திமுக குடும்ப அரசியல் என்றால் சென்னை அண்ணா நகரில் உள்ள சுனில் யார்? இபிஎஸ் மகன் யார்? இவர்கள் குடும்பம் இல்லாமல் அரசியல் செய்கிறீர்களா? அதிமுகவில் குடும்ப அரசியல் தான் நடக்கிறது. 4800 கோடி முறையீடு வழக்கு இன்று சந்தி சிரிக்கிறது. அதிமுக ஆட்சியில் தமிழகத்தை சுரண்டி சுரண்டி நாசம் செய்து விட்டனர். நான்கு ஆண்டுகள் இபிஎஸ் முதலமைச்சராக ஆட்சி செய்தார். அப்போதுதான் கடந்த 2018 ஆம் ஆண்டு 4800 டெண்டர் முறைகேடு ஊழல் தொடர்பாக மறைந்த எம்எல்ஏ வெற்றிவேல், மற்றும் தங்க தமிழ்ச்செல்வன் ஆகியோர் ஆவணங்கள் கொடுத்ததின் மூலம் திமுகவைச் சேர்ந்த ஆர் எஸ் பாரதி வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கு விசாரணையில் உள்ளது. இந்த நிலையில் தற்போது இபிஎஸ் திமுகவை பார்த்து ஊழல் ஊழல் என்று கூறுகிறார். கடந்த ஒரு வருடம் திமுக ஆட்சியில் எங்கெல்லாம் ஊழல் நடந்துள்ளது என பட்டியலிட்டு சொல்லுங்கள், இந்த இடத்தில் தான் நடந்துள்ளது என கூறுங்கள், ஆதாரத்துடன் லஞ்ச ஒழிப்புத்துறையில் புகார் கொடுங்கள், இதை செய்யாமல் ஊழல் ஆட்சி என்று ஏன் சொல்கிறேன்.
அப்படி சொன்னால் திமுகவினர்கள் எங்கு ஊழல் நடந்தது என உங்களை பார்த்து கேட்பார்கள் அல்லவா? பதிலுக்கு அவர்கள் சொல்வார்கள் 4800 கோடி முறைகேட்டில் வழக்கில் மாட்டி உள்ளீர்கள், 600 கோடியில் முறைகேட்டில் சிக்கி உள்ளீர்கள், துவரம் பருப்புக்கு 15 ரூபாய் கிலோவுக்கு சேர்த்து கொள்முதல் செய்தாய், சக்கரை கொள்முதலில் பத்து ரூபாய் சேர்த்து வாங்கியது, ஒரு கோடி லிட்டர் பாமாயில் கொள்முதலில் பத்து ரூபாய் கூடுதலாக செலுத்தி வாங்கியது, என மாதம் மாதம் இப்படி ரேஷன் உணவு பொருட்களை கொள்முதல் செய்ததில் நடந்துள்ள முறைகளை திமுக அரசு கேட்கும் அல்லவா?. திமுக மீதும் முதல்வர் மீதும் ஒரே வருத்தம் உள்ளது. அதிமுகவின் மீது ஊழல் குற்றச்சாட்டில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்ட நிலையில் அவர்களை கைது செய்யப்படாமல் விட்டிருப்பது புரியாத புதிராக உள்ளது.
இதனால் தான் இபிஎஸ் சுதந்திரமாக சுற்றி விடியல் அல்ல விடாய ஆட்சி என பேசி வருகிறார். நான் உட்பட மக்களின் எதிர்பார்ப்பு திமுக அரசு ஏன் இன்னும் லஞ்ச புகாரில் அதிமுகவினர் கைது செய்யப்படாமல் உள்ளனர்? என்பதுதான். திருமதி சசிகலா எல்லோரையும் ஒருங்கிணைப்பேன் எனக் கூறுகிறார். அதில் எடப்பாடி பழனிச்சாமியின் சேர்க்கலாம் என சசிகலா நினைத்தால் முதலில் எதிர்ப்பவன் நான். இபிஎஸ்-க்கு அதிமுகவில் ஒரு போதும் மன்னிப்பே கிடையாது. மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சசிகலா உட்பட அனைவரும் இணைந்து செயல்படுங்கள் என அறிவுரை வழங்கினார். ஆனால் எடப்பாடி பழனிச்சாமி அதனை ஏற்றுக்கொள்ளவில்லை அதனால் தான் தோல்வியை தழுவினோம்” என தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், அதிமுக மற்றும் அதிமுக தொண்டர்கள் மீது அவரது தொழிலை முடக்கும் வகையில் வழக்குகள் போடுவதன் மூலம் அதிமுகவை அளிக்க முடியாது. அதிமுக ஆட்சியில் திமுகவின் மீது எந்த வழக்குகளும் அவர்களுக்கு தொழில் மீது போடவில்லை. அதிமுகவும் கோவிலாக தலைமைக் கழகம் எம்ஜிஆர் இல்லம் போற்றப்படுகிறது அந்த கட்டடத்தில் கதவை உடைத்து உள்ளே சென்று ஜெயலலிதா அறையில் வைத்து அங்கிருந்து பொருட்கள் ஆவணங்கள் திருடி சென்று கட்சி நிர்வாகிகளும் கற்கள் மூலம் தாக்கியவர் ஓபிஎஸ் தவறா இந்த கட்சிக்கு கட்சி தொண்டர்களுக்கு நன்மை செய்வார். நெஞ்சில் ஈரம் இறக்கம் இல்லாமல் கொடுங்கோல் செயல்களை செய்தவர் கட்சியின் தலைவராக இருக்க முடியுமா என ஓபிஎஸ் மீது குற்றம் சாட்டினர்.