×

அதிமுகவை எந்த கொம்பனாலும் அழிக்க முடியாது: ஆர்.பி.உதயகுமார் 

 

அதிமுகவை எந்த கொம்பானாலும் அழிக்க முடியாது, அதற்கு வருகிற நாடாளுமன்ற தேர்தலின் தீர்ப்பே சாட்சியாக இருக்கும் என முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உரப்பனூர் கிராமத்தில், அதிமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு விழாவை, இத்தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரும், முன்னாள் அதிமுக அமைச்சருமான ஆர்.பி. உதயகுமார் திறந்து வைத்தார். அதன்பின் பேசிய அவர்,  “அதிமுகவை எந்த கொம்பனாலும் அழிக்க முடியாது. இது எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதாவால் உருவாக்கப்பட்ட கட்சி, ஆகையால் இதனை அழிக்க நினைப்பவர்கள் அழிந்து போவார்கள். வருகிற பாராளுமன்ற தேர்தலின் தீர்ப்பே இதற்கு சாட்சியாக இருக்கும்” என பேசினார்.

முன்னதாக நீர் மோர் பந்தலில் ,  கம்மங்கூழ்,  கேப்பைக் கூழ்,  மோர், சர்பத் , இளநீர் மற்றும் வாழைப்பழங்களில் பலவிதமான வாழைப்பழங்கள்,  பழங்களில் தண்ணீர் பழம்,  பப்பாளி,  திராட்சை, பலாப்பழம்,  நொங்கு உள்ளிட்ட பல்வேறு வகையான பழங்களை வைத்து பொதுமக்களுக்கு வழங்கினார். அப்போது , அதிமுகவில் இதுவரை பொதுமக்களுக்கு வழங்கப்படாத நீர் மோர் பந்தலாக இந்த நிகழ்வு இருப்பதால், முன்மாதிரியான நீர்மோர் பந்தலாக இதனை அதிமுகவினர் எடுத்துக் கொள்ள வேண்டும் எனவும் பேசினார்.